பஸ் டிக்கெட்டை விட ரேட் கம்மி! சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் விலை இவ்வளவு தானா?

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த ரயிலை வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைக்கிறார் இதுபோக மேலும் இரண்டு நாட்களையும் சேர்த்து துவக்கி வைக்கிறார் இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது மக்கள் மத்தியில் இந்த ரயிலில் பயணிக்க ஆர்வம் அதிகமாக இருக்கிறது இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ரோட்டிலும் புதிய புதிய ரயில்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன. தற்போது தமிழகத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் விற்கும் சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவைக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றன.

tirunelveli chennai vande bharat

இந்நிலையில் நீண்ட நாட்களாக சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தப்படும் என பேச்சு எழுந்து வந்த நிலையில் இது தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது இறுதியாக வரும் 24ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் உட்பட 3 வந்தே பாரதல் ரயில்களை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது.

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் போக சென்னை-விஜயவாடா மற்றும் காசர்கோடு திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் மொத்தம் மூன்று வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமாக உள்ளன. இந்த ரயில்கள் எல்லாம் எட்டு பெட்டிகள் கொண்ட வஞ்சை பாரத் பெயர்களாக அறிமுகம் ஆகிறது.

tirunelveli chennai vande bharat

சென்னை-நெல்லை வந்து பொருத்தவரை அதிகாலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பும் இந்த வந்தே பாரத் ரயில் சரியாக மதியம் 1:50 மணிக்கு சென்னை வந்தடைகிறது. அதே ரயில் சென்னையிலிருந்து மதியம் 2:50 மணிக்கு கிளம்பி இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை சென்று அடைகிறது. அதாவது பயண நேரம் என்பது 7 மணி நேரம் 50 நிமிடமாக இருக்கிறது.

இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் இந்த ரயில் 652.49 கிலோமீட்டர் பயணிக்கிறது. சராசரியாக 83.30 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் தனது பயணத்தை மேற்கொள்கிறது. இந்த ரயிலுக்கான டிக்கெட் விலை விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த ரயில் காலை 6 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து கிளம்பி, காலை 7:15 மணிக்கு விருதுநகரிலும், 7:50 மணிக்கு மதுரையிலும், 8:40 மணிக்கு திண்டுக்கல்லிலும், 9:55 மணிக்கு திருச்சியிலும், நின்று செல்லும். மதியம் 2:50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பும் திருச்சிக்கு மாலை 6:45 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 19:55 மணிக்கும், இரவு 8:45 மணிக்கு மதுரைக்கும், இரவு 9:15 மணிக்கு விருதுநகரிலும் இரவு10:40 மணிக்கு நெல்லைக்கு வந்தடைகிறது.

இந்த ரயிலில் தற்போது 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அதிகமான பெட்டிகள் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திருநெல்வேலி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இது போக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் லிஃப்ட், எஸ்கலேட்டர், காத்திருப்பவர்களுக்கான அறை, கழிப்பறைகள் ஆகியவற்றை புதிதாக கட்டமைக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் விரிவாக நடந்து வருகிறது. மேலும் இந்த வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் தற்போது வெளியில் கசிந்துள்ள தகவலின் படி திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு செல்ல ஏசி சேர் கார் கோச்சில் ரூபாய் 1625 டிக்கெட் விலையாகவும் எக்ஸிக்யூட்டிவ் சேர் கார்டில் செல்ல ரூபாய் 2815 டிக்கெட் விலையாகவும் நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கிறது. இது தற்போது உள்ள ரயில் டிக்கெட்டை விட அதிகமாக இருந்தாலும் பண்டிகைகாலங்களில் செயல்படும் பஸ் டிக்கெட்டை விட குறைவு தான்.

விடுமுறை காலங்கள் மற்றும் பண்டிகை நேரங்களில் நெல்லை-சென்னை இடையே தனியார் பஸ்களின் டிக்கெட் விலை ரூபாய் இரண்டாயிரத்திற்கும் மேல் கூட விற்பனை செய்யப்படுகிறது. இதை கணக்கிட்டு பார்த்தால் பஸ் டிக்கெட் விலையை விட வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை குறைவாக இருக்கிறது. அதை நேரம் பயண நேரமும் குறைவாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வந்தே பாரத் ரயில்கள் நிச்சயம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் படிதான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் முக்கியமான நோக்கம் பயண நேரம் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் சராசரியாக 80கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்கிறது. இது குறைவான வேகம் தான் இன்னும் இதன் பயண வேகத்தை கூட்டி பயண நேரத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் வழி செய்ய வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 21, 2023, 11:27 [IST]
English summary
Pm to flag off nellai chennai vande bharat express train know price details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+