Just In
- 5 hrs ago
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- 9 hrs ago
விபத்தில் சிக்கிய ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார்!! இருவர் காருக்கு உள்ளேயே கருகி பலி!
- 10 hrs ago
100 கிமீ ரேஞ்ச்.. அசத்தலான புதிய நெக்ஸு எலெக்ட்ரிக் சைக்கிள் அறிமுகம்!
- 10 hrs ago
மாஸ்க் அணியவில்லை என்றால், என்ன இப்படி தூக்குறாங்க!! போலீஸாரிடம் சிக்கிய தம்பதியினர்...
Don't Miss!
- News
பிரார்த்தனையில் மூழ்கிய பெண்.. பின்னாலிருந்து திடீரென.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகர் கைது
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Lifestyle
நீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகமா படிங்க...!
- Movies
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிக்னலில் இளைஞர் செய்த காரியம்... பாராட்டி தள்ளிய நெட்டிசன்கள்!! 2 நாளில் 8 மில்லியன் வியூவ்ஸை தொட்ட வீடியோ!!
அனைத்து வாகனங்களும் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்த வேலையில் காரை விட்டு இறங்கிய இளைஞர் ஒருவர் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் என்ன செய்தார் என்பது குறித்த தகவலைக்கீழே காணலாம்.
இளைய தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வரும் 'வாத்தி கமிங்' பாடலுக்கு தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

எனவேதான் இன்ஸ்டாவின் ரீல்ஸ் தொடங்கி முகப்புத்தகத்தின் ஷார்ட் வீடியோ வரை அனைத்திலும் இவ்வீடியோவின் ஆதிக்கம் அதிகளவில் தென்படுகின்றது. பலர் இப்பாடலுக்கு டப் செய்வதை நம்மால் காண முடிகின்றது.

இந்த நிலையில், மஹராஷ்டிரா மாநிலம், மும்பை நகரத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தபோது வாத்திங் கமிங் பாடலுக்கு சூப்பராக நடனமாடி நெட்டிசன்கள் மனதில் இடம் பிடித்தார். பைக்குடன் சிக்னலில் நின்றுக் கொண்டிருக்கும் அவர், திடீரென பைக்கை விட்டை இறங்கி நடுரோட்டில் நடனமாடும் அந்த வீடியோவை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், இந்திய இளைஞரின் இதுமாதிரியான ஓர் செயலை போலந்து நாட்டைச் சார்ந்த ஓர் நடனமாடும் கலைஞரும் நடு ரோட்டில் செய்திருக்கின்றார். இவரும், சிக்னல் விளக்கு சிவப்பில் இருக்கும்போதே நடனமாடியிருக்கின்றார். காரில் இருந்து மிக வேகமாக இறங்கி செல்லும் அவர், திடீரென மூன்-வால்க் எனப்படும் புகழ்பெற்ற நடன கலையை சாலையில் நிகழ்த்தினார்.

இதுகுறித்த வீடியோ டிக்டாக், முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக வைரலாகி வருகின்றது. இவ்வீடியோவைப் பார்த்த பலர் தாங்கள் மெய்மறந்து விட்டதாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக ஒரு சில நெட்டிசன்கள் இவ்வீடியோவைப் பலமுறை பார்த்தும் எங்களுக்கு சற்றும் சலிப்பை ஏற்படுத்தவில்லை என கூறியிருக்கின்றனர்.

ஒரு சிலர் இவரின் நடனம் மைக்கேல் ஜான்சனையே மிஞ்சும் அளவிற்கு இருப்பதாக கூறியிருக்கின்றனர். தற்போது வரை இவ்வீடியோவை 7.9 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டிருக்கின்றனர். கடந்த 28ம் தேதி அன்றே இவ்வீடியோ பதிவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், மிக குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்த வீடியோவாக இது மாறியிருக்கின்றது. நடனமாடியவரின் பெயர் கமில் ஸ்பெஜென்கோவ்ஸ்கி (Kamil Szpejenkowski) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் ஓர் நடன கலைஞர் ஆவார். இவர் தனது மூன்று வயதில் இருந்தே நடனமாடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் சும்மா இருக்கின்ற போதும்கூட இவர் நடனமாடிக் கொண்டே இருப்பாராம். அவ்வாறு, காரில்போகும்போது சிக்னலில் அதிக நேரம் காத்திருந்த சூழ்நிலையிலேயே அவர் நடனமாடியிருக்கின்றார். இந்த ஒற்றை செயலால் அவர் தற்போது உலக ஃபேமஸ் நபராக மாறியிருக்கின்றார்.

மூன் வால்க் நடனத்தை இந்த உலகிற்கு முதலில் அறிமுகப்படுத்தியவர் மைக்கேல் ஜான்சன். இவர், 1983 மே மாதம் 16ம் அன்றே இந்த நடனத்தை உலக மேடையில் முதன் முறையாக அரங்கேற்றினார். இந்த நடனத்தைப் பார்த்த அனைவரும் எப்படி ஒரு மனிதனால் இப்படி நடனமாட முடியும் என பிரம்மித்து நின்றனர். இப்போது இந்த நடனக்கலையில் பலர் மிரளவைக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், ஒரு சிலர் மைக்கேல்ஜான்சனையே மிஞ்சும் அளவிற்கு மூன் வால்க் நடனத்தில் புதிய புதிய ஸ்டெப்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், தனது தனி திறமையால் அனைவரின் கவனத்தையும் போலந்து நாட்டைச் சேர்ந்த நடனக் கலைஞர் காமில் ஸ்பெஜென்கோவ்ஸ்கி தற்போது கவர்ந்திழுத்திருக்கின்றார்.