எரிபொருள் இல்லாம நின்னது அவங்களோட காரா! தள்ளனது யார்னு தெரிஞ்சதும் நாடே அதிர்ச்சியில் ஒறஞ்சிருச்சு!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார் ஒன்றை நிறைய பேர் சேர்ந்து தள்ளி செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? என நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த வீடியோவில் நாம் பார்க்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார், காவல் துறைக்கு சொந்தமானது ஆகும். அதை தள்ளி சென்றவர்கள், வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். காவல் துறை அதிகாரிகள், அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மஹிந்திரா ஸ்கார்பியோ கார் எரிபொருள் தீர்ந்து நின்று விட்டது.

Police Car Runs Out Of Fuel, Prisoners Push It Till Court

இதன் காரணமாக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வைத்து, அந்த கார் தள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட கூடாது என ஒரு ஓரமாக மட்டும் தள்ளி நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. மாறாக நீதிமன்றம் வரை அவர்கள் காரை தள்ளி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பீஹார் (Bihar) மாநிலம் பகல்பூர் (Bhagalpur) பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில், எந்த அதிகாரி தவறு செய்திருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

Petrol Pump

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காரை ஸ்டார்ட் செய்யும்போதே எவ்வளவு எரிபொருள் உள்ளது? என்பதை டிரைவர் கவனித்திருக்க வேண்டும். அதையும் மீறி எரிபொருள் தீர்ந்து விட்டதா? சரி, பரவாயில்லை. முதலில் காரை சாலையின் ஒரு ஓரமாக தள்ளி பாதுகாப்பாக நிறுத்தியிருக்க வேண்டும். இதற்கு பிறகு 2 ஆப்ஷன்கள் உள்ளன.

ஒன்று டோ ட்ரக்கை (Tow Truck) அங்கு வரவழைத்திருக்கலாம். அதற்கு பிறகு காரை டோ செய்து, அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு கொண்டு சென்றிருக்கலாம். அல்லது வேறு யாராவது ஒருவர் மூலமாக எரிபொருளை நிகழ்விடத்திற்கே வரவழைத்திருக்கலாம். அதை விடுத்து விட்டு, நீதிமன்றம் வரை காரை தள்ளி சென்றிருப்பது சரியான விஷயமாக தெரியவில்லை.

அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை வைத்து தள்ள வைத்திருப்பது தவறான விஷயமாக தெரிகிறது. எனவே காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த விஷயத்தில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்தாக உள்ளது.

இந்த விஷயம் நம் அனைவருக்குமே கூட ஒரு பாடம்தான். வாகனத்தை எடுப்பதற்கு முன்பு எரிபொருள் எவ்வளவு உள்ளது? என்பதை கண்டிப்பாக 'செக்' செய்ய வேண்டும் என்பதை இந்த சம்பவம் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு வேளை வாகனம் எரிபொருள் தீர்ந்து நடுவழியில் நின்று விட்டால், நாங்கள் மேலே கூறிய 2 வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 21:02 [IST]
English summary
Police car runs out of fuel prisoners push it till court viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+