மணிக்கு 299 கிமீ வேகத்தில் பறந்த யமஹா பைக்: சாதுர்யமாக பிடித்த போலீசார்!
கனடாவின், பிரிஷ்ட்டிஷ் கொலம்பியா(பி.சி) மாகாணத்தில் அதிவேகத்தில் பைக் ஓட்டியவரை போலீசார் யூ ட்யூப் மூலம் கண்டுபிடித்தனர்.
கனடாவின் பிரிஷ்ட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் டிரான்ஸ்- கனடா நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லும் பைக்கின் வீடியோ சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும், இதுகுறித்து பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண போலீசாருக்கும் புகார்கள் வந்தததுடன், அந்த சாலையில் சென்ற சில வாகன ஓட்டிகளும் போலீசிடம் புகார் தெரிவித்திருந்தனர். அந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையில் காற்றை கிழித்துக் கொண்டு மணிக்கு 299 கிமீ வேகத்தில் அந்த பைக் சென்றது வீடியோவில் தெரிகிறது.
இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட ஐபி முகவரியை வைத்து 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை பிடித்துள்ளனர். அவர்தான் பைக்கை ஓட்டியதாக கருதப்படுகிறது.
7.5 கிமீ நீளம் கொண்ட அந்த சாலையை அவர் மின்னல் வேகத்தில் கடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதிவேகத்தில் சென்ற அந்த 2006ம் ஆண்டு மாடல் யமஹா ஆர்1 பைக் அவரது அம்மா பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், அந்த பைக்கிற்கு இன்ஸ்யூரன்ஸ் இல்லை என்பதுடன், பைக்கை ஓட்டியதாக கருதப்படும் வாலிபரிடம் உரிய ஓட்டுனர் உரிமமும் இல்லை. எல்எல்ஆர் மட்டுமே வைத்துள்ளார்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்களுக்காக அவரது ஓட்டுனர் உரிமம் ஏற்கனவே 5 முறை ரத்து செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டியது, பைக்கிற்கு இன்ஸ்யூரன்ஸ் இல்லாதது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது ஆகிய மூன்றிற்கும் சேர்த்து 1,462 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் லாக்-இன் செய்து வீடியோவை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








