உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டு பைக்குகளை போக்குவரத்து போலீஸார் வலை விரித்து வேட்டையாடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பும், வரவேற்பும் நிலவி வருகின்றது. இந்த மோட்டார்சைக்கிள்கள் ரம்மியமான தோற்றத்தை பெற்றிருப்பதாலும், அதன் சைலென்சர்கள் எழுப்பும் சப்தத்தின் காரணமாகவும், அதன்மீது மதிமயங்கிய இளைஞர்கள், அதற்கான சந்தையை குறைவில்லாமல் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் சைலென்சர்கள் எழுப்பும் சப்தத்தைக் காட்டிலும் அதிக சப்தத்தை எழுப்பும் வகையிலான சைலென்சர்களை இளைஞர்கள் சிலர் மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்று, வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவது தற்போதைய சூழலில் குற்றமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

ஆகையால், போக்குவரத்து போலீஸார் கடும் கெடுபிடியுடன், மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், அதன் உரிமையாளர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், மாடிஃபை சைலென்சர்களை பொருத்திய வாகனங்கள் வேட்டையில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் போலீஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, அவர்கள் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களையே அதிகம் பறிமுதல் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஈடி ஆட்டோ ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

ஹைதராபத்தில் உள்ள ராமகுண்டம் நகர போலீஸார்தான் இந்த தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், இதனை வித்தியாசமான முறையில் கையாண்டு வருகின்றனர். அந்தவகையில், சாலையில் மெக்கானிக்குடன் காத்திருக்கும் போலீஸார், அப்போது சாலையில் அதிகம் சப்தத்துடன் வருகின்ற வாகனங்களை மடக்கி, உடனடியாக அதன் சைலென்சர்களை அதிலிருந்து நீக்குகின்றனர்.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

அதிலும் முக்கியமாக ராயல் என்பீல்டு பைக்குகளை கண்டாலே, அதனை மடக்கி போலீஸார் பரிசோதிப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அதிக சப்தத்தோடு வரும் ராயல் என்பீல்டு பைக்குகளைப் மடக்கி, உடனடியாக அதில் மாடிஃபை செய்த சைலென்சரை போலீஸார் கழட்டுகின்றனர்.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

பின்னர், அந்த பைக்கின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து மேற்படி நடவடிக்கை மேற்கொள்கின்றனர். தொடர்ந்து, இதுகுறித்த தகவலையும் ஆர்டிஓ அலவலகத்திற்கும் கொடுக்கின்றனர். இதனால், எதிர்காலத்தில் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

MOST READ: மாட்டு சாணத்தால் காரை கோட்டிங் செய்த மோடி ஊர்க்காரர்... எதற்காக என தெரிந்தால் திகைத்து போவீர்கள்...

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

இதுபோன்று கெடுபிடியான நடவடிக்கையில், அண்மைக் காலங்களாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேற்கொண்டு வந்தநிலையில், தற்போது தெலங்கானாவும் இணைந்துள்ளது. அதேசமயம், இந்த மாநில போக்குவரத்து போலீஸார், இ-செலான் அபராதத் தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருக்கும் வாகன ஓட்டிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தக்க தண்டனையை வழங்கி வந்தனர்.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

இந்நிலையில்தான், தற்போது அதிரடி வேட்டையாக மாடிஃபை வாகனங்கள்மீது தங்களின் பார்வையை செலுத்தியுள்ளனர். வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து இயக்கும் கலாச்சாரம் அண்மைக் காலங்களாகதான் இந்தியாவில் அதிகரித்து வருகின்றது. இதுபோன்று, வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

MOST READ: சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

இதனை உறுதி செய்யும்விதமாக, அண்மையில் உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவினைப் பிறப்பித்திருந்தது. அதில், "மாடிஃபை செய்து இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியிருந்தது.

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

மாடிஃபை சைலென்சர்களில் இருந்து வெளிவரும் சப்தங்களால் சாலையில் செல்லும் சக பயணிகள், பாதசாரிகள் உட்பட பலர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிலும், பறவைகள் மற்றும் விலங்குகளே இதனால், அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஆகையால், இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

MOST READ: இனி உங்கள் வீட்டிலும் ஹூண்டாய் கார்... நம்ப முடியாத மலிவான விலையில் களமிறங்கியது அதிநவீன வெனியூ

உசார்... ராயல் என்பீல்டு பைக்குகளை குறிவைக்கும் போலீஸார்: எதற்கு தெரியுமா...?

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இந்தியாவின் பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையிலேயே, கேரள, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மாடிஃபை வாகனங்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்து வருகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Caught And Removed Modified Exhaust System In Royal Enfield Bullet Bikes. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X