நீதிபதியிடமே வேலையை காட்டிய போலீஸ்காரர்! சீட்டை கிழிச்சு அனுப்பீட்டாங்க! நடந்தது தெரிந்தால் ஷாக் ஆயிருவீங்க!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வருபவர் அமித் ஜில்பே. இவருக்கு 32 வயதாகிறது. கடந்த காலங்களில் பல முறை இவர் ஏராளமான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டுதான் அமித் ஜில்பே வேலையில் சேர்ந்தார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, அதாவது 2019ம் ஆண்டிலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டார்.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது 90 நாட்களுக்கு மேலாக அமித் ஜில்பே வேலைக்கு வரவில்லை. எனவே உயர் அதிகாரிகள் அவரை சஸ்பெண்ட் செய்தனர். அதன்பின் மீண்டும் பணிக்கு சேர்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் அமித் ஜில்பே சிக்கியுள்ளார்.

Car Accident

மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் வால்மீகி சா மெனசஸ் வீட்டில் சமீபத்தில் அமித் ஜில்பேவிற்கு பாதுகாப்பு பணி வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் நீதிபதி வால்மீகி சா மெனசஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இதை பயன்டுத்தி கொண்ட கான்ஸ்டபிள் அமித் ஜில்பே, நீதிபதியின் காரை எடுத்து கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக நீதிபதியின் கார் விபத்தில் சிக்கியது. மின்சார கம்பம் ஒன்றின் மீது மோதியதால், கார் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கான்ஸ்டபிள் அமித் ஜில்பே நீதிபதியின் வீட்டிலேயே அவரது காரை நிறுத்தி விட்டார். ஆனால் தான் காரை எடுத்து ஓட்டியது குறித்தோ அல்லது விபத்து குறித்தோ அவர் யாரிடமும் வாய் திறக்கவே இல்லை.

இந்த சம்பவம் நாக்பூர் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே மீண்டும் வீட்டிற்கு திரும்பிய நீதிபதி குடும்பத்தினர், கார் எப்படி சேதமடைந்தது? என்பது தெரியாமல் குழப்பம் அடைந்தனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல் துறை உயர் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

இதன் ஒரு பகுதியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில், அமித் ஜில்பே செய்த காரியங்கள் தெரியவந்தன. இதை தொடர்ந்து கான்ஸ்டபிள் அமித் ஜில்பே தற்போது பணியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே காரில் ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு 2.28 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது.

இந்த தொகையை, கான்ஸ்டபிள் அமித் ஜில்பேவிடம் இருந்து வசூல் செய்யவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளனர். கான்ஸ்டபிள் ஒருவர் நீதிபதியின் காரை எடுத்து கொண்டு ஊர் சுற்றி, விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அனைவர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது சொத்துக்கள் மற்றும் மக்களின் சொத்துக்களை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்களே தங்கள் பொறுப்பை மறந்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்க கூடியது அல்ல. எனவேதான் அதற்கான தண்டனையை கான்ஸ்டபிள் அமித் ஜில்பே தற்போது அனுபவித்து வருகிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு சிலருக்கு வித விதமான கார்களை ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல், கார்களை எடுத்து பயன்படுத்த கூடாது. அவர்களின் அனுமதிக்கு பிறகு பயன்படுத்தினாலும் கூட, மற்றவர்களின் கார் என்பதை மனதில் வைத்து கொண்டு, மிகவும் கவனமாக இயக்க வேண்டும். (இந்த செய்தியில் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்).

More from DriveSpark

Article Published On: Wednesday, May 24, 2023, 14:09 [IST]
English summary
Police constable dismissed for taking judges car for joyride all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+