தல, தளபதிலாம் ஓரமா போய் விளையாடுங்க... இந்த 50 வயசு கான்ஸ்டபிள்தான் உண்மையான ஹீரோ... இந்தியாவே பாராட்டுது...
காவல் துறை அதிகாரிகள், கொள்ளையர்களை விரட்டி சென்று பிடித்த காட்சிகள் பலவற்றை நாம் சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் அத்தகைய சினிமா காட்சிகளை விஞ்சும் வகையிலான சம்பவம் ஒன்று பெங்களூர் (Bangalore) நகரில் தற்போது நடைபெற்றுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் (Police Constable) ஒருவர், தன் உயிரை பணயம் வைத்து, கொள்ளையனை பிடித்துள்ளார். திரைப்படங்களை விஞ்சும் வகையிலான இந்த அதிர்ச்சி சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களில் (CCTV Cameras) பதிவாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், பரபரப்பான பெங்களூர் நகர சாலைகளில், ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரில் ஒருவர் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் பெயர் மஞ்ஜேஷ் என்பதாகும்.

அவர் மீது 75க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே காவல் துறை அதிகாரிகள் அவரை தேடி வந்ததாக தெரிகிறது. காவல் துறை அதிகாரிகளின் ரேடாரில் இருந்த சமயத்தில்தான், பெங்களூர் நகர சாலைகளில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், மஞ்ஜேஷ் சுற்றியுள்ளார்.
இது குறித்த தகவலின் பேரில், போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா என்பவர், மஞ்ஜேஷின் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்ஜேஷ், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் வேகமாக ஆக்ஸலரேட்டர் கொடுத்து, அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார்.
ஆனால் போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா, அவரை விடவில்லை. மஞ்ஜேஷின் சட்டை காலரை பிடித்து கொண்டார். அப்போது மஞ்ஜேஷ் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை முறுக்கவே, போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா சிறிது நேரம் தரதரவென இழுத்து செல்லப்பட்டார். ஒரு கட்டத்தில் சாலையில் கீழே விழுந்த போதும் கூட போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா, மஞ்ஜேஷை விடவில்லை.
அவரது காலை கெட்டியாக பிடித்து கொண்டார். இதனால் மஞ்ஜேஷால், அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை. ஒரு சில வினாடிகளில் அங்கிருந்த மற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடி விட்டனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, மஞ்ஜேஷை மடக்கி பிடித்து விட்டனர்.
தற்போது காவல் துறை அதிகாரிகளால், மஞ்ஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 130 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வீர தீர செயலுக்காக, போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையாவை, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உண்மையில் போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா, தன் உயிரையே பணயம் வைத்துதான், கொள்ளையன் மஞ்ஜேஷை பிடித்துள்ளார். கடந்த காலங்களில் ஒரு சில காவல் துறை அதிகாரிள், கொள்ளையர்களையோ அல்லது வாகன தணிக்கைக்காக பொதுமக்களையோ தடுத்து நிறுத்தியபோது, இக்கட்டான சூழல்களை சந்தித்துள்ளனர்.
அதாவது ஒரு சிலர் வாகனங்களை நிறுத்துவதில்லை. மாறாக வாகனங்களுடன் சேர்த்து, காவல் துறை அதிகாரிகளை தரதரவென இழுத்து சென்று விடுகின்றனர். காரின் பானெட்டில் சிக்கி கொண்டு, பல கிலோ மீட்டர் தூரம் பயணித்த காவல் துறை அதிகாரிகள் குறித்த செய்திகளை எல்லாம் நாம் கேள்விபட்டுள்ளோம்.
கிட்டத்தட்ட அதேபோன்றதொரு சம்பவம்தான் தற்போது பெங்களூரில் நடைபெற்றுள்ளது. இத்தனைக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையாவிற்கு, 50 வயதாவதாக கூறப்படுகிறது. இந்த வயதிலும், ஸ்கூட்டரில் வந்த கொள்ளையனை, தனது வீர தீர செயல் மூலமாக போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா மடக்கி பிடித்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
நல்ல வேளையாக இந்த சம்பவத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையாவிற்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாகனங்கள் அதிகம் வந்து சென்று கொண்டிருந்த ஒரு பரபரப்பான சாலையில் இதை செய்ய நிச்சயமாக துணிச்சல் வேண்டும். ஒரு சிறிய தவறு நடந்தால் கூட, இது சாலை விபத்தாக மாறி உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
ஆனால் அதை எல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையா தீரத்துடன் செயல்பட்டு, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மடக்கியுள்ளார். இதற்காக காவல் துறை உயர் அதிகாரிகளும் கூட, போலீஸ் கான்ஸ்டபிள் தொட்ட லிங்கையாவிற்கு தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








