ஒன்னில்ல, ரெண்டில்ல 509 சைலென்சர்களை ரோடு போடும் வண்டியை வைத்து அழித்த போலீஸ்காரர்கள்.. ஏன், எதுக்காக?

500க்கும் அதிகமான ராயல் என்பீல்டு பைக் (Royal Enfield Bike)-குகளின் எக்சாஸ்ட் சிஸ்டங் (Exhaust System)-களை போலீஸ்காரர்கள் நடு ரோட்டில் போட்டு அழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. சாலை போட உதவும் வாகனத்தை வைத்தே அனைத்து சைலென்சர்களும் அழிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த காட்சி பார்ப்போரை பதைபதைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, ராயல் என்பீல்டு பைக் காதலர்களை மிகப் பெரிய அதிர்ச்சியில் இந்த சம்பவம் ஆழ்த்தி இருக்கின்றது. அதிலும், ஊருக்குள் மைனர் கணக்கா புடுபுடுனு சத்தம் போடும் சைலென்சர்களைப் போட்டுக் கொண்டு பைக்குகளில் வலம் வந்துக் கொண்டிருந்தவர்களின் மனதில் இந்த நிகழ்வு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Police crush illegal silencer

இந்த மாதிரியானோரின் வாகனங்களில் இருந்த சைலென்சரே அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு இருக்கின்றது. அளவிடப்பட்டதைக் காட்டிலும் அதிக இரைச்சலை ஏற்படுத்திய எக்சாஸ்ட் சிஸ்டம்கள் அவை என கூறப்படுகின்றது. இதனால்தான் அவற்றிற்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்கின்றது. அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது மட்டுமல்ல, அனைத்து சைலென்சர்களும் சட்ட விரோத சந்தைக்கு பிறகானவை என கூறப்படுகின்றது.

இதுவும் அந்த சைலென்சர்களை போலீஸார்கள் பாராபட்சமின்றி அழிக்க காரணமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 509 எக்சாஸ்ட் சிஸ்டம்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலம் ஹபுர் எனும் பகுதியிலேயே அரங்கேறி இருக்கின்றது. அதிக இரைச்சலை ஏற்படுத்தும் சைலென்சர்கள் ஒலி மாசை ஏற்படுத்துவதோடு அல்லாமல், பலவீன இதயம் கொண்டவர்களையும் அதிகளவில் பாதிக்கச் செய்கின்றது.

காதை கிழிக்கும் அதீத சத்தம் காரணமாக இன்னும் வயதானவர்கள், குழந்தைகளுக்கே மிகப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுதவிர, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் இந்த சத்தம் அச்சுறுத்தம் வகையில் அமைகின்றது. இந்த மாதிரியான காரணங்களினாலேயே சந்தைக்கு பிறகான எக்சாஸ்ட் சிஸ்டம்களுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகின்றது.

இதை மீறியும் ஒரு சிலர் தங்களின் பைக்குகளில் பொருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவை வழங்கி வருகின்றனர். இதனால்தான் உபி காவல்துறை, அவர்கள் மீது சிறிதும் கரிசணம் காட்டாமல் சைலென்சர்களை அழித்திருக்கின்றனர். இதுபோன்று ஆஃப்டர் மார்க்கெட் சைலென்சர்கள் அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் அழிக்கப்படுவது முதல் முறையல்ல.

Police crush silencer

இதற்கு முன்னதாகவும் இதுபோன்று அதிக எண்ணிக்கையில் சைலென்சர்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் போலீஸார்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 1000க்கும் அதிகமான சைலென்சர்களை அழித்தனர். இந்த வீடியோ மிகப் பெரிய தாக்கத்தை பைக் காதலர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, மிகப் பெரிய சைலென்சர் அழிப்பு சம்பவமாக உபியின் ஹபுர் பகுதியில் அரங்கேறி இருக்கின்றது. மோட்டார் வாகன சட்டம் பிரிவு 190 (2)இன்-படி, அதிக சத்தத்தை ஏற்படுத்தும் ஹாரன் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டம்களை பொருத்தும் வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது.

Illegal silencer

இதேபோல், அங்கீகரிக்கப்படாத தலைக்கவசங்களை அழித்த சம்பவமும் இந்த உலகத்தில் அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. கர்நாடகாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான அரை முக தலைக்கவசங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன. அவை அனைத்தும் துளியளவும் பாதுகாப்பிற்கு உகந்த ஹெல்மெட் என்கிற காரணத்தினாலேயே அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காற்று மாசு விஷயத்தில் மட்டுமல்ல ஒலி மாசு விஷயத்திலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அதிக ஒலியையும் எழுப்பும் ஹாரன், சைலென்சர் உள்ளிட்ட பிற சாதனங்கள் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றது. முந்தைய நாட்களில் சவுண்ட்டான ஹாரன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தகந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 8, 2024, 11:27 [IST]
English summary
Police crushed illegal silencers here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X