காவல் துறை அதிரடி... தமிழகத்தில் பொருத்தப்படும் அதிநவீன கேமராக்கள்! இது என்ன செய்யும்னு தெரிஞ்சா அசந்திருவீங்க
தமிழகத்தில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வேலூர் மாவட்ட காவல் துறையினர், எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில், ஏஎன்பிஆர் கேமராக்களை பொருத்தும் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். Automatic Number Plate Recognition என்பதன் சுருக்கம்தான் ANPR. குற்றவாளிகளை கண்டறிவதற்கு இந்த கேமராக்கள் உதவி செய்யும் என வேலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கேமராக்கள் வாகனங்களின் நம்பர் பிளேட்களை புகைப்படம் எடுக்கும். அதன்பின் கம்ப்யூட்டரில் உள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்யும். ஏஎன்பிஆர் கேமராக்கள், வாகனங்களின் நம்பர் பிளேட்களை 'ரீட்' செய்யும். அதன் பிறகு, டேட்டா அனலைசருக்கு தரவுகளை அனுப்பும். இதன் அடிப்படையில் சோதனை சாவடியை கடந்து சென்ற வாகனம் திருடப்பட்டதா? இல்லையா? என்பது கண்டுபிடிக்கப்படும்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், ''திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடிப்பதற்கு ஏஎன்பிஆர் கேமராக்கள் எங்களுக்கு உதவி செய்யும். அத்துடன் ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களை 'டிரேஸ்' செய்வதற்கும் இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் உதவியாக இருக்கும்.

இந்த கேமராக்கள் வாகனங்களின் நம்பர் பிளேட்களை புகைப்படம் எடுக்கும். பிறகு கம்ப்யூட்டரில் ஏற்கனவே இருக்க கூடிய தரவுகளுடன் பகுப்பாய்வு செய்யும். பிளாக்-லிஸ்ட் செய்யப்பட்ட தரவுகள், அதாவது திருடப்பட்ட வாகனங்களின் தரவுகள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே இருக்கும். சோதனை சாவடியை கடந்து சென்ற வாகனம் பிளாக்-லிஸ்ட் செய்யப்பட்டது என்பது கண்டறியப்பட்டால், ஏஎன்பிஆர் கேமராக்கள் காவல் துறை அதிகாரிகளை எச்சரிக்கை செய்யும்'' என்றனர்.

இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''திருடப்பட்ட வாகனங்கள் கடத்தல் கும்பல்களால் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய வாகனங்களில்தான் நிறைய பொருட்களை கடத்துகின்றனர். மணல் கடத்தலுக்கும் கூட திருடப்பட்ட வாகனங்கள்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் அந்த வாகனங்களை கண்டறிவதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் ஏஎன்பிஆர் கேமராக்கள் எங்களுக்கு உதவி செய்யும்'' என்றனர். வேலூர் மாவட்ட காவல் துறையினரால் இந்த திட்டம் முதலில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், தமிழகம் முழுக்க விரிவுபடுத்தப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக சென்னையில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தலின் பேரில், அங்கு தற்போது இந்த நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், பிளாக்-லிஸ்ட் செய்யப்பட்ட வாகனங்களைதான் மணல் கடத்தல் போன்ற சம்பவங்களுக்கு குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். அத்துடன் செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களுக்கும் கூட திருடப்பட்ட வாகனங்களைதான் குற்றவாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் வருங்காலங்களில் இதுபோன்ற குற்ற செயல்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்படும் என காவல் துறை உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கை தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

தற்போது குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு காவல் துறை அதிகாரிகள் பல அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்கு இந்த ஏஎன்பிஆர் கேமராக்கள் ஒரு உதாரணம். இதுதவிர போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கும் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே காவல் துறையினர் இல்லாவிட்டாலும் கூட கேமராக்கள் கண்காணிக்கும் என்ற அச்சம் இருப்பதால், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக காவல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








