முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000 என போலீஸார் கரார் முகம் காட்டி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றச் சம்பவங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுகின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், உச்சபட்ச அளவில் உயர்த்தப்பட்ட அபரதாம் மிக முக்கியமானதாக காட்சியளிக்கின்றது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

என்னதான் இதுபோன்று விதிகள் கொண்டுவரப்பட்டாலும் வாகனங்கள் சார்ந்து நடைபெறும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆகையால், போலீஸார்களின் தீவிரப்படுத்தி விதிமீறல்களைக் குறைக்கும் விதமான முயற்சியில் ஒரு மாநில அரசுகள் செய்து வருகின்றன.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

அந்தவகையிலான, ஓர் முயற்சியைதான் சண்டிகர் மாநில காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இவர்கள், முன்னதாக ஆஃப்டர் மார்க்கெட் உதிரிபாகங்கள், ஹெல்மெட் இல்லாமல் பயணித்தல் போன்ற விதிமீறல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைப் போலவே ஸ்டிக்கர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

குறிப்பாக அதிகாரம், ஜாதி மற்றும் கருத்துகளை வெளிப்படுத்துகின்ற வகையிலான ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்கும் வாகனங்களுக்கு இரும்பு கரங்களை ஓங்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால், வாகனங்களில் கருத்துகளை வெளிப்படுத்துகின்றோம் என்ற பெயரில் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வரும் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அண்மையில், சண்டிகர் உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவின்பேரில் போலீஸார் இந்த தீவிர நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

இதற்கு முன்பாக ஆஃப்டர் மார்க்கெட் சாதனங்களான அதிக ஒலியை எழுப்பும் சைலென்சர், பிரஷ்ஷர் ஹாரன்கள் மற்றும் எல்இடி மின் விளக்குகளுக்கு எதிராகவும் இதேபோன்று அதிரடியான நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து தங்களின் கவனத்தை தேவையற்ற ஸ்டிக்கர்கள் பக்கம் திருப்பியுள்ளனர்.

அந்தவகையில், ஸ்டிக்கர் ஒட்டி சாலையில் பறந்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்றிற்கு போலீஸார் அபராத செல்லாணை வழங்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நியூஸ் 18 வெளியிட்டுள்ளது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

சண்டிகர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் ஜாதி மற்றும் கருத்துகள் அடங்கிய ஸ்டிக்கரைப் போலவே காவல்துறை, கடற்படை, ராணுவம், விமானப்படை, பத்திரிக்கை, தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட எந்தவொரு பதவியையும் தனியார் வாகனங்களில் ஒட்டுவது தண்டனைக்குரிய செயலாக மாறியுள்ளது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

ஆனால், அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கிய வாகனங்களில் இதுமாதிரியான ஸ்டிக்கர்கள் செல்லும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், சொந்த வாகனங்களில் ஒட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

அதேசமயம், வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளிலும் ஒரு சிலர் விநோதமான எழுத்துகளைப் பயன்படுத்துகின்றனர். இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நம்பர் பிளேட்டுகளில் பதிவெண் மட்டுமே இடம்பெற்றிருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை பின்பற்றாத எவராக இருந்தாலும் அவருக்கு சம்பவ இடத்திலேயே அதற்கான அபராதம் அல்லது வழக்கைத் தொடரலாம் என்ற அதிகாரத்தையும் உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு வழங்கியுள்ளது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

இந்த புதிய உத்தரவை ராஜீவ் ஷர்மா மற்றும் அமோல் ரத்தன் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கியுள்ளது. இந்த புதிய உத்தரவை அமல்படுத்த வாகன ஓட்டிகளுக்கு 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிள்ளைச் சுழி போடும் விதமாக மஹிந்திரா பொலேரோவிற்கு அபராத செல்லாண் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனத்தின் விண்ட் ஷீல்ட் பகுதியில் குஜ்ஜார் என்ற எழுத்தை ஒட்டியிருந்த காரணத்திற்காக போலீஸார் அபராத செல்லாணை வழங்கியுள்ளனர்.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

மஹிந்திரா மட்டுமின்றி டாடா நானே காரும் கடற்படை சின்னம் பொருத்தியிருந்த காரணத்திற்காக செல்லாண் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த ஸ்டிக்கரும் சம்பவ இடத்திலேயே அகற்றப்பட்டது. இந்த விதியை முதல் முறையாக மீறுபவர்களுக்கு ரூ. 500-ம், இரண்டாவது முறையாக மீறுபவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.

இந்த சட்டம் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து சண்டிகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால், சண்டிகரை ஒட்டியுள்ள அண்டை மாநில வாசிகளும் தங்களின் வாகனங்களில் ஒட்டியுள்ள ஸ்டிக்கரை அகற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பதவியை ஸ்டிக்கர் வாயிலாக வாகனங்களில் காண்பித்து பலர் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக எழும்பிய புகாரின் அடிப்படையிலேயே இந்த அதிரடி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

டோல்கேட் மற்றும் வாகன சோதனை உள்ளிட்டவற்றில் தப்பிப்பதற்காக அரசு பதவியில் இல்லாதவர்கள்கூட பதவியில் இருப்பதாக பொய்யான ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரை ஏமாற்றி வந்தனர். மேலும், விதிமீறலிலும் ஈடுபட்டனர். இதுபோன்ற முரண்பாடான செயல்பாடுகள் இனிவரும் காலங்களில் சண்டிகரில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் முறைனா ரூ. 500, இரண்டாம் முறைனா ரூ. 1,000: கரார் முகம் காட்டும் போலீஸ்... எதற்காக தெரியுமா...?

ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டுவது தடைச் செய்யப்பட்டுள்ளதோ அதேபோன்று ஆம்புலன்ஸ் மற்றும் அவசர கால வாகனங்களைத் தவிர வேறெந்த வாகனங்களிலும் ஹூட்டர்கள் எனப்படும் ஒலிப் பெருக்கி, சைரன் மற்றும் பிளாஷ்ஷர்கள் பயன்படுத்த நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனை, பிரதமர் வாகனங்களில்கூட பயன்படுத்தகூடாது என்ற விதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு சில அரசு அதிகாரிகள் இதனை விதிமீறி பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Has Started Taking Action Against Stickers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X