சென்னையில முக்குக்கு முக்கு கேமரா மாட்டிட்டாங்க! இனிமே வளைச்சு வளைச்சு பைன் போட போறாங்க!

சென்னையில் 50 புதிய இடங்களில் 200 நம்பர் பிளேட் ரீடிங் கேமராவை பொருத்த சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த கேமராக்கள் போலீசார் இல்லாமலேயே சாலையில் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சாலைகளில் வாகனங்களில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான விதியை இந்திய மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. இந்த விதியை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களுக்குத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். இங்கு ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள். வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட நபருக்கும் அதிகமான நபர்களை ஏற்றி செல்பவர்கள் என மோட்டார் வாகன சட்டத்தை மீறுபவர்கள் மீது அபராதம் விதிப்பார்கள்.

சென்னையில முக்குக்கு முக்கு கேமரா மாட்டிட்டாங்க! இனிமே வளைச்சு வளைச்சு பைன் போட போறாங்க!

இந்நிலையில் மக்கள் மத்தியில் போலீசார் இருந்தால் சட்ட விதிமுறை கடைப்பிடித்துச் செல்வது, இல்லை என்றால் சட்ட விதிமுறைகளை மீறுவது எனப் பழக்கமாகிவிட்டனர். தூரத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுவதைக் கண்டதுமே வாகன ஓட்டிகள் உஷாராகிவிடுகின்றனர். இதைத் தடுக்க போலீசார் சமீப காலமாக தொழிற்நுட்ப உதவியை நாடி வருகின்றனர். இதற்காக தற்போது மார்கெட்டில் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்காணிக்கும் நவீன கேமரா வந்துவிட்டது.

இதை நகரின் முக்கியமான இடங்களில் போலீசார் பொருத்தி வருகின்றனர். இந்த கேமராவில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி சாலையில் வாகனத்தில் பயணிப்பவர்களைப் புகைப்படம் எடுத்து அவரது வாகன நம்பர் பிளேட் உடன் புகைப்படம் எடுத்து வாகனம் போர்டலுக்கு அனுப்பி விடும் வாகனம் போர்டல் மூலம் குறிப்பிட்ட நபருக்கு ஆன்லைன் வழியாக அபராதம் விதிக்கப்படும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. நகரின் முக்கியமான பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதியைச் சென்னை போலீசார் டிராஃபிக் ரெகுலேஷன் அபர்சர்வேஷன் சோன் எனக் குறிப்பிடுகின்றனர். தற்போது சென்னை போலீசார் ஏற்கனேவ உள்ள பகுதி தவிர மேலும் 50 பகுதிகளை இந்த டிராஃபிக் ரெகுலேஷன் அப்சர்வேஷன் சோன் உள்ளே கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதற்காக 200 ஆட்டோமெட்டிக் நம்பர் பிளேட் ரெகனனேஷன் கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக டென்டர் விடப்பட்டுக் கடந்த திங்கள் கிழமை இது உறுதி செய்யப்பட்டது.

இது மட்டுமல்ல இந்த கேமராக்களில் அபராதம் விதிக்கப்படும் நபருக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவல், அதற்கான ஆதாரம் ஆகியவற்றை அவருக்கு உடனடியாக வாட்ஸ் அப், வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், உள்ளிட்டவை மூலம் தெரிவிக்கப்படும். மேலும் இந்த தகவல் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கும் அனுப்பி வைக்கப்படும். அபராதம் விதிக்கப்பட்ட நபர் போலீஸ் ஸ்டேஷன் சென்று கூட அபராதத்தை ரத்து செய்து கொள்ள முடியும்.

இதனால் நீங்கள் சாலையில் வாகனம் ஓட்டும் போது சிக்னலில் தான் போலீஸ் இல்லையே என சிக்னலை ஜம்ப் செய்வது சிக்னலில் நிற்கும் போது எல்லைக் கோட்டை தாண்டி வாகனத்தை நிறுத்துவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது என எந்த சட்ட விரோத செயல்களையும் செய்யாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைப் புகைப்படம் எடுத்து இந்த கேமராக்கள் உங்களுக்கு அபராதம் விதித்து விடும். இந்த இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Article Published On: Tuesday, February 7, 2023, 11:30 [IST]
English summary
Police installs 200 anpr cameras in 50 different locations in Chennai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+