காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

கார், பைக்கில் அமர்ந்து மது அருந்தியவர்கள் உள்பட மொத்தம் 27 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுதொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

By Arun

பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாக 27 பேரை சண்டிகர் நகர போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், 5 பேர் தங்கள் கார்கள் மற்றும் பைக்கில் அமர்ந்து மது அருந்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் கார், பைக்குகளும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

இந்தியாவில் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் சிலர் சாலை ஓரங்களில், காரை பார்க்கிங் செய்து விட்டு, காருக்கு உள்ளேயே ஹாயாக அமர்ந்து கொண்டு மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

கார் என்பது பொது இடம் அல்ல என்பது அவர்களின் வாதமாக உள்ளது. ஆனால் பொது இடத்தில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள காரில் அமர்ந்து கொண்டு மது அருந்துவது என்பது, பொது இடத்தில் மது அருந்துவதாகவே கருதப்படும்.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

எனவே பொது இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள காரில் அமர்ந்து மது அருந்தும் அனைவரையும் அதிரடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் காரும் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு விடும். போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் காரை மீட்க, கோர்ட்டிற்கு நடையாய் நடக்க வேண்டியதிருக்கும்.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

பொது இடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் அமர்ந்து புகை பிடித்தாலும் கூட, போலீசார் அபராதம் விதிப்பார்கள். இதற்கு பொது இடத்தில் புகை பிடிப்பதற்கு உள்ளூர் சட்டம் தடை விதித்திருக்க வேண்டும். அப்படியான இடங்களில், வாகனங்களில் அமர்ந்து புகை பிடித்தாலும் அபராதம் விதிக்கப்படும்.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குடி போதையில் வாகனம் ஓட்டுவதே விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், குடி போதையில் வாகனம் ஓட்டுவது குறைந்தபாடில்லை.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்தாலும், அதை எளிதாக கட்டி விடுகின்றனர். கைது செய்தாலும் உடனடியாக ஜாமீன் வாங்கி விடுகின்றனர். ஒரு நாள் சிறை தண்டனையை கூட அவர்கள் அனுபவிப்பது இல்லை.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

எனவே இதற்கு முடிவு கட்டும் விதமாக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும்படி, கோவா மாநில போலீசார் அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்படுபவர்கள் கட்டாயம் கம்பி எண்ண வேண்டியதிருக்கும்.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

அதாவது ஜாமீன் கிடைக்காமல் குறைந்தபட்சம் 7 நாட்கள் அவர்கள் சிறை வாசத்தை அனுபவிக்க வேண்டியது வரும். குறைந்தபட்சம் 7 நாட்களை சிறையில் கழித்த பிறகே ஜாமீன் என்ற ஆப்ஷனை பயன்படுத்த முடியும்.

காரில் மது அருந்தினால் கைது.. 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் பேச முடியாது..

ஜாமீன் பெற வழியில்லாமல், 7 நாட்களை சிறையில் கழிக்க வேண்டியது வரும் என்பதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையும். எனவே 'நீ முதல்ல ஒயின்ஷாப்ப மூடுயா' என பிஜிலி ரமேஷ் ஸ்டைலில் வசனம் எல்லாம் பேசி கொண்டிருக்க முடியாது. கண்டிப்பா 7 நாள் ஜெயில்தான்.. களிதான்.. கம்பி எண்ண வேண்டியதுதான்..

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police made 5 arrests for drinking alcohol inside a vehicle. Read in Tamil
Story first published: Saturday, July 28, 2018, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X