போலீஸ் காரிலேயே இப்படியா! வீடியோ வெளியானதால் அதிர்ச்சியில் உறைந்த இன்ஸ்பெக்டர்! காட்டு தீ மாதிரி பரவுது!
யூடியூப் (Youtube), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஃபேஸ்புக் (Facebook) ஆகிய சமூக வலை தளங்களில் தற்போது நிறைய பேர் மிகவும் பிரபலமாக உள்ளனர். இவர்களில் ஒரு சிலர், கார் (Car) மற்றும் பைக் (Bike) உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டண்ட் (Stunt) செய்து வீடியோ வெளியிடுகின்றனர்.
இதில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஸ்டண்ட் செய்யும் சமூக வலை தள பிரபலங்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். ஆனால் சமூக வலை தள பிரபலம் ஒருவரால், காவல் துறை அதிகாரியே தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார். இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில் பஞ்சாப் காவல் துறையின் மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காரில் ஏறி, இளம்பெண் ஒருவர் ஆட்டம் போடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையின் மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் ஏறி ஆட்டம் போட்ட இளம்பெண் சமூக வலை தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) வீடியோ உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் இந்த விபரீத காரியத்தை செய்துள்ளார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மாவிடம் அனுமதி பெற்ற பிறகுதான், சமூக வலை தளங்களில் பிரபலமாக இருந்து வரும் அந்த இளம்பெண் காவல் துறையின் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். எனவேதான் இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மா தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜலந்தர் போலீஸ் கமிஷனரான குல்தீப் சஹால் ஐபிஎஸ்-தான், இன்ஸ்பெக்டர் அசோக் ஷர்மாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆனால் காவல் துறையின் அதிகாரப்பூர்வ வாகனத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்க பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளும், மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரை அதிகாரப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் காவல் துறைகளை இதற்கு உதாரணமாக கூற முடியும். இப்படி காவல் துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் ஒரு அதிகாரப்பூர்வ காரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக பயன்படுத்தியிருப்பதை சரியான விஷயமாக கருத முடியவில்லை. அதுவும் இன்ஸ்பெக்டரின் அனுமதியோடு!
எனவே இன்ஸ்பெக்டர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சரியான ஒன்றாகவே கருத முடியும். காவல் துறை போன்ற அரசுக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ வாகனங்களை வேறு தவறான விஷயங்கள் எதற்கும் பயன்படுத்த கூடாது என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. எனவே அரசு அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications








