போலீஸ்காரங்க இப்படிலாம் கூட இருப்பாங்களா! இந்த மாதிரி ஒருத்தரை இதுக்கு முன்னாடி பாத்ததே இல்ல!

இந்தியாவின் பைக் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று கவாஸாகி இஸட்900 (Kawasaki Z900). இதன் 2026 வெர்ஷன் இந்திய சந்தையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 9.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 13 லட்ச ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த கவாஸாகி இஸட்900 பைக்கை, ஐதராபாத் (Hyderabad) நகரை சேர்ந்த காவல் துறை அதிகாரி (Police Officer) ஒருவர் தற்போது வாங்கியுள்ளார்.

Vamshi

இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video), vamshi_m7 என்ற இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், காவல் துறை அதிகாரியான வம்சி, கவாஸாகி இஸட்900 பைக்கை டெலிவரி எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது அவர் காவல் துறை சீருடையில் இருந்தார்.

இவர் பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட காவல் துறை அதிகாரி ஆவார். அத்துடன் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களிலும் இவர் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வருகிறார். எனவே அவர் கவாஸாகி இஸட்900 பைக்கை வாங்கியிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Kawasaki Z900

இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2026 கவாஸாகி இஸட்900 பைக்கில், 948 சிசி இன்லைன் 4 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 125 ஹெச்பி பவர் மற்றும் 98.6 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இது 2025 மாடல் உடன் ஒப்பிடும்போது, 1 ஹெச்பி மற்றும் 1.2 என்எம் அதிகம் ஆகும்.

2026 கவாஸாகி இஸட்900 பைக்கில், ட்யூயல் சேனல் ஏபிஎஸ், ட்ராக்ஸன் கண்ட்ரோல், ரைடிங் மோடுகள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்பட்டுள்ளன. இது இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்று. 2026 கவாஸாகி இஸட்900 பைக்கில், 2 புதிய கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஐகானிக் கேண்டி க்ரீன் மற்றும் கோல்டு ஃப்ரேம் உடன் கூடிய கருப்பு ஆகியவை ஆகும்.

முன்னர் கவாஸாகி இஸட்900 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 9.52 லட்ச ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் புதிய ஜிஎஸ்டி வரி விகிதம் அமலுக்கு வந்த பிறகு, கவாஸாகி இஸட்900 பைக்கின் விலை 10.18 லட்ச ரூபாயாக உயர்ந்தது. ஆனால் 2026 மாடல் அறிமுகத்தின் மூலம், மீண்டும் இஸட்900 பைக்கின் விலையை, கவாஸாகி நிறுவனம் 10 லட்ச ரூபாய்க்குள் என்ற அளவில் கொண்டு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் மிகவும் விலை உயர்ந்த, அதே நேரத்தில் செயல்திறன் மிக்க பைக்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட காவல் துறை அதிகாரிகளை காண்பது அரிதான ஒரு விஷயம் ஆகும். அப்படிப்பட்ட அரிதான காவல் துறை அதிகாரிகளில் ஒருவராக வம்சி உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 19:45 [IST]
English summary
Police officer buys kawasaki z900 viral video check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+