ஒவ்வொரு போலீஸும் இவரை மாதிரி இருந்தால் பிரச்சனையே இல்ல!! ஒரே நாளில் ஹீரோவாக... சினிமாவில் தான் இப்படி நடக்கும்

பெங்களூரில் மாநகர பேருந்து ஓட்டுனர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன காரணத்தினால் பேருந்தை உதவி போலீஸ் கமிஷ்னர் (ACP) இயக்கி சென்றது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. யார் அந்த போலீஸ் உதவி கமிஷ்னர்? எங்கிருந்து எது வரையில் பேருந்தை இயக்கினார்? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் விவரமாக பார்க்கலாம்.

'போலீஸ் உங்கள் நண்பன்' என்ற வாக்கியத்திற்கு ஏற்ப போலீசார் பலர் பொது மக்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது குடும்பத்தில் ஒருவராகவும் இருந்து செய்த காரியங்கள் பலவற்றை நாம் இணையத்தில் பார்த்திருக்கிறோம். சில போலீஸார் மக்களிடம் அடாவடித்தனமாக நடத்து கொண்டாலும், அவர்களை மறக்கடிக்கும் விதமாக சில போலீஸார் சேவை புரிந்துள்ளனர்.

police officer drives govt bus

அத்தகையவர்களுள் ஒருவரை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் மாநகர உதவி போலீஸ் கமிஷ்னராக பணியாற்றி வருபவர் பி ராமசந்த்ரா. கடந்த ஜூலை 17ஆம் தேதி, பரபரப்பான திங்கட்கிழமை காலை நேரத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஏசிபி-ஆக இருந்தாலும் நேரடியாக ராமசந்த்ரா ஈடுப்பட்டு கொண்டிருந்தார்.

ஏனெனில், அந்த சமயத்தில் தேசிய எதிர்கட்சி தலைவர்கள் மாநாடு பெங்களூரில் நடைபெறுவதாக இருந்தது. நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட இந்த மாநாட்டில் கலந்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சமயத்தில், பழைய ஏர்போர்ட் சாலையில், வழித்தடம் 330-இல் அரசு பி.எம்.டி.சி பேருந்தை இயக்கி வந்த ஓட்டுனருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது ஏசிபி ராமசந்த்ராவுக்கு தெரியவந்தது.

பேருந்தை இயக்கும் அளவிற்கு கூட உடம்பில் வலு இல்லாத காரணத்தினால் பேருந்தை சாலையின் ஓரத்தில் ஓட்டுனர் நிறுத்தி வைத்திருந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஏசிபி ராமசந்த்ரா ஓட்டுனரின் நிலையை அறிந்து ஆம்புலன்ஸை அழைத்து அருகில் இருந்த போரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதன்பின், சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை உணர்ந்த ஏசிபி யாரையும் எதிர்பாராமல் உடனே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்க ஆரம்பித்துவிட்டார். அப்போது பேருந்தினுள் பயணிகள் இருந்தனரா என்பது தெரியவில்லை. ஏனெனில், டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள இதுகுறித்த வீடியோவில், ஏசிபி ராமசந்த்ரா மற்றும் பேருந்து இயங்கும் சாலை மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

சில கிலோமீட்டர் தொலைவிற்கு பேருந்தை இயக்கிய ராமசந்த்ரா பின்னர் டிப்போ ஒன்றில் பேருந்தை கொண்டுப்போய் நிறுத்தியுள்ளார். பின்னர் இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராமசந்த்ரா, "உடனே, டிரைவரை ஆம்புலன்ஸில் போரிங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பேருந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால், பிஎம்டிசி பஸ் ஷெல்டரில் நிறுத்துவதற்குள் ஒரு கிலோமீட்டருக்கு மேல் ஓட்டி சென்றேன்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏசிபி ராமசந்த்ராவின் விவேகமான மற்றும் தன்னலமற்ற செயல் பொது வெளியிலும், இணையத்திலும் பலத்தரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக இணையத்தில், ராமசந்த்ரா மாநகர பேருந்தை இயக்கும் வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலர் லைக்குகளை அள்ளி வழங்கி வருகின்றனர். ஏசிபி ராமசந்த்ராவின் செயலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 19, 2023, 23:48 [IST]
English summary
Police officer drives govt bus in bengaluru
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+