11 லட்ச ரூபாய் பைக்கை ரோட்ல பார்த்ததும் போலீஸ் அதிகாரி செய்த காரியம்! எல்லாரும் வாயை பிளந்துட்டாங்க!

இந்தியாவில் தற்போதெல்லாம் சூப்பர்பைக்குகளை (Superbikes) வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் சூப்பர்பைக்குகளுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். ஆம், சூப்பர்பைக் உரிமையாளர்கள், போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) மீறுவதாக ஒரு சில காவல் துறை அதிகாரிகள் அவர்களாகவே நினைத்து கொள்கின்றனர்.

அத்துடன் அபராதங்களையும் (Fines) விதித்து விடுகின்றனர். இதன் காரணமாக காவல் துறை அதிகாரிகளுக்கும், சூப்பர்பைக் உரிமையாளர்களுக்கும் இடையே சில சமயங்களில் தேவை இல்லாமல் வாக்குவாதங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆனால் ஒரு சில காவல் துறை அதிகாரிகள் விதிவிலக்காக வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர்.

Police Officer Spotted Riding Kawasaki Z900

அதாவது சூப்பர்பைக்குகளை பார்த்தால், அவற்றின் விலை (Price) மற்றும் மைலேஜ் (Mileage) குறித்த தகவல்களை எல்லாம் ஆர்வத்துடன் விசாரிக்கின்றனர். அத்துடன் ஜாலியாக ஒரு ரைடும் சென்று வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ரோஹித் குமார் (Rohit Kumar) என்ற காவல் துறை அதிகாரி சமீபத்தில், கவாஸாகி இஸட்900 (Kawasaki Z900) பைக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. உடனே அதன் உரிமையாளரிடம் பேசி அவர் ஜாலியாக ஒரு ரவுண்டு சென்று விட்டார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் பிரபலமாக ஒருவராக உள்ளார். பல லட்சக்கணக்கானோர் அவரை பின் தொடர்கின்றனர். எனவே அவர் வெளியிட்ட வைரல் வீடியோ (Viral video) சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பைக் தனது கனவு என அவர் வர்ணித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவில், காவல் துறை அதிகாரி ரோஹித் குமார், முறையாக ஹெல்மெட் (Helmet) அணிந்து கவாஸாகி இஸட்900 பைக்கை ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இது உண்மையிலேயே மற்றவர்களுக்கு முன்னுதாரணமான மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அந்த பைக்கில், ரியர் வியூ மிரர்கள் இல்லை.

இது பாதுகாப்பானது அல்ல. அத்துடன் ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் பைக் ஓட்டுவது என்பது விதிமுறை மீறல் ஆகும். இதற்கு அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனவே மிகவும் பிரபலமான மனிதர்கள் ஒரு விஷயத்தை செய்யும்போது, கவனமாக செய்வது நல்லது. இல்லாவிட்டால் அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

சரி, பைக்கிற்கு வருவோம். கவாஸாகி இஸட்900 பைக்கில் மிகவும் சக்தி வாய்ந்த 948 சிசி லிக்யூட் கூல்டு இன்-லைன் 4-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 125 பிஎஸ் பவர் மற்றும் 98.6 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கவாஸாகி இஸட்900 பைக்கின் விலை 9.20 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன் ரோடு விலை (On-Road Price) தோராயமாக இன்னும் ஒரு லட்ச ரூபாய் அதிகமாக வரும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கவாஸாகி இஸட்900 போன்ற பைக்குகளை பார்த்தால், யாராக இருந்தாலும், ஓட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை வருவது இயல்புதான். எனவே காவல் துறை அதிகாரி ரோஹித் குமார் இந்த பைக்கை ஓட்டி பார்த்ததில் எங்களுக்கு வியப்பேதும் இல்லை. ஆனால் காவல் துறை அதிகாரி ஒருவர் இந்த பைக்கை ஓட்டியதால், பொதுமக்கள் பலரும் இதை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, December 22, 2023, 18:45 [IST]
English summary
Police officer spotted riding kawasaki z900 viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+