எமர்ஜென்ஸி வார்டுக்குள் காரில் சென்ற போலீஸ்! காரணத்தை கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு! மக்கள் கொந்தளிக்கறாங்க
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், காவல் துறையின் மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) கார் ஒன்று, மருத்துவமனை ஒன்றுக்குள் நுழைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்தது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை ஆகும்.
இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நிகழ்ந்தது, உத்தரகண்ட் (Uttarakhand) மாநிலம் ரிஷிகேஷ் (Rishikesh) நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆகும். அந்த எய்ம்ஸ் மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டிற்குள் (Emergency Ward), காவல் துறை அதிகாரிகள் மஹிந்திரா பொலிரோ காரில் சென்றுள்ளனர். பாலியல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்காகவே, எய்ம்ஸ் மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டிற்குள் காவல் துறை அதிகாரிகள் மஹிந்திரோ பொலிரோ காரில் நுழைந்துள்ளனர். ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவருக்கு, நர்சிங் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பெண் மருத்துவர் தரப்பில் புகார் வந்ததையடுத்து, நர்சிங் அதிகாரியை கைது செய்வதற்காக, எமர்ஜென்ஸி வார்டிற்குள் மஹிந்திரா பொலிரோ காரில் காவல் துறை அதிகாரிகள் நுழைந்துள்ளனர். அந்த வைரல் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புகார் வந்ததையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கு தேவையான முயற்சிகளை உடனடியாக எடுத்த காவல் துறையை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் அதற்காக ஒரு மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டிற்குள் காரில் நுழைய வேண்டுமா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய நிறைய வழிகள் இருக்கும்போது, மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டிற்குள் காவல் துறை அதிகாரிகள் ஏன் காரில் நுழைந்தனர்? என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. அதாவது அந்த அளவிற்கு சூழ்நிலை ஏன் சென்றது? என்ற தகவல் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் காவல் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தவறு போலதான் தெரிகிறது. மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டு என்பதுதான் இதற்கு காரணம். இந்த வீடியோவை பார்க்கும்போதே நிறைய நோயாளிகள் ஸ்ட்ரெச்சரில் இருப்பது நமக்கு தெரிகிறது. அங்கு மஹிந்திரா பொலிரோ செல்ல போதுமான இடம் இல்லை.
எனவே பாதுகாவலர்கள் நோயாளிகளுடன் ஸ்ட்ரெச்சரை நகர்த்தி வைக்கின்றனர். அத்துடன் அங்கு காவல் துறையின் மஹிந்திரா பொலிரோ கார் சென்றதால், தேவையில்லாத கூச்சல், குழப்பமும் ஏற்பட்டது. மருத்துவமனையின் எமர்ஜென்ஸி வார்டு என்பது அமைதியாக இருக்க வேண்டிய ஒரு இடம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எமர்ஜென்ஸி வார்டுகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன், நோயாளிகள் சிகிச்சை பெற்று கொண்டிருக்கலாம். அங்கு புகையை கக்க கூடிய வாகனத்தை கொண்டு சென்றதும் தவறான ஒரு விஷயமாகவே தெரிகிறது. இதன் காரணமாக காவல் துறையின் நடவடிக்கையை நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் நாம் காணும் மஹிந்திரா பொலிரோ காவல் துறையின் ஆஸ்தான வாகனங்களில் ஒன்று. தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள் கூட மஹிந்திரா பொலிரோ காரை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். காவல் துறை அதிகாரிகள் மட்டுமல்லாது, தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளும் மஹிந்திரா பொலிரோ காரை பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








