பேயை தொடர்ந்து ஏஐ கேமிராவின் கண்களில் சிக்கிய அதிர்ச்சியான சம்பவம்! இந்த விஷயத்துல போலீஸே களமிறங்கிட்டாங்க!

கேரளாவில் ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமிரா பயன்பாட்டிற்கு வந்தது முதல் அம்மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்தததோ இல்லையோ, தினந்தோறும் சர்ச்சைகளுக்கு குறைவின்றிக் காணப்படுகின்றது. சமீபத்தில்கூட இந்த ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமிராவால் எடுக்கப்பட்ட புகைப்படத்தால் மிகப் பெரிய சர்ச்சை அம்மாநிலத்தில் கிளம்பியது.

மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கண்கானிக்கும் பொருட்டுக் கொண்டு வரப்பட்டதே இந்த ஏஐ கேமிரா. இது போக்குவரத்து விதிமீறல்களைக் கண்கானிப்பதோடு, குறிப்பிட்ட அந்த வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு விதிமீறலுக்கான அபராத செல்லாணையும் அனுப்பி வைக்கும். அபராத செல்லாணில் விதிமீறல் குறித்த புகைப்பட ஆதாரமும் இடம் பெற்றிருக்கும்.

AI camera captured car pic

போக்குவரத்து விதிமீறலை தான் செய்யவில்லை என்று கூறி வாகன ஓட்டிகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்பதற்காக செல்லாண் உடன் சேர்த்து புகைப்படம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த புகைப்படமே சில சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்திருக்கின்றது. சமீபத்தில், ஏஐ கேமிராவால் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் பேய் சிக்கியதாக வெளியாகிய தகவல் மாநிலத்தையே அதிர்ச்சுக்குள்ளாக்கும் வகையில் அமைந்தது.

ஒரு வார இடைவெளியிலேயே இதுமாதிரியான இரண்டு சம்பவங்கள் அந்த மாநிலத்தில் அரங்கேறியது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. எப்போதும் போல் கேரள போக்குவரத்து போலீஸார் போக்குவரத்து ஏஐ கேமிரா வாயிலாக எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அபராத செல்லாணை மாருதி 800 காரின் உரிமையாளர் ஒருவருக்கு அனுப்பி வைத்தனர்.

AI camera captured pic

சீட் பெல்ட் அணியாத விதிமீறலுக்காகவே அபராத செல்லாண் போக்குவரத்து போலீஸாரால் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புகைப்படத்தில் பின்னிருக்கையில் மர்ம பெண் ஒருவர் அமர்ந்திருப்பதாககூறி அந்த வாகனத்தை ஓட்டி அதிர்ச்சி புகாரை முன் வைத்தார். சம்பவத்தன்று, தானும் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழைந்தகள் ஆகியோர் மட்டுமே காரில் பயணித்ததாகவும், ஆனால், ஓர் முதிர்ந்த வயதுடைய பெண் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பதைப் போன்று புகைப்படம் வந்திருப்பதாகவும் கூறி அமானுஷ்ய அச்சத்தை கிளப்பிவிட்டார்.

இதேபோல், இரண்டாவது சம்பவத்திலும் மர்ம பெண் ஒருவர் அமர்ந்திருந்ததாக அந்த காரின் உரிமையாளர் பகீர் புகாரை முன் வைத்தார். டொயோட்டா கிளான்ஸா காரின் உரிமையாளர் தனியாக பயணித்து வந்தநிலையில், முன்னிருக்கையில் யாரோ மர்ம பெண் ஒருவர் அமர்ந்திருப்பதைப் போன்ற படம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Police vehicle

ஆனால், இந்த காரின் உரிமையாளரோ தான் சம்பவத்தன்று எந்த பெண்ணையும் அழைத்துச் செல்லவில்லை. தனியாகவே பயணித்தேன் என கூறி மேலும் அதிர்ச்சியைக் கிளப்பினார். இவ்வாறு போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்ட ஓர் ஏஐ கேமிராவால் பல்வேறு குழப்பங்கள் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன.

ஆனால், இது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட சர்ச்சையாக இருக்கும் என மாநிலத்தின் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்து இருக்கின்றன. மேலும், இந்த சம்பவங்கள் குறித்த துள்ளியமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு சர்ச்சையான சம்பவம் குறித்த தகவல் தற்போது அதே ஏஐ தொழில்நுட்பம் கொண்ட கேமிராவின் வாயிலாக வெளியுலகிற்கு தெரிய வந்திருக்கின்றது.

Challan pic

அது என்னவென்றால், போலீஸார் வாகனங்களே விதிமீறலில் ஈடுபட்டிருப்பதுதான். காவல்துறைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் காவலர்கள் சீட் பெல்ட் அணியாமல் பயணித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக இதே விதிமீறலில் குறிப்பிட்ட அந்த காவலர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 726 ஏஐ கேமிராக்கள் மாநிலத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் சிறப்பாக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகின்றது. இதனால், மாநிலத்தில் விதிமீறல்களின் எண்ணிக்கைக் குறைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஏஐ கேமிராக்கள் வாயிலாக காவல்துறையினர் கண்டிக்கப்பட்டு வருகின்றனர் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் காவல் இடையே வாக்குவாதம் ஏற்படும் வீடியோ இணையத்தில் வெளியாகியது. காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காவலர்களை பொதுமக்களில் ஒருவர் கேள்விக் கேட்பதைப் போன்றும், கேள்விக் கேட்டவரை போலீஸார் சிறைப்பிடிக்க முயற்சித்த காட்சிகளுமே இணையத்தில் வெளியாகின.

இந்த சம்பவத்தின்போது மேலும் சிலர் கூடி ஞாயத்தைத் தட்டிக்க கேட்ட இளைஞருக்கு குரல் கொடுக்கத் தொடங்கினர். போலீஸுக்கு சட்டம் இல்லையா என பலர் கேட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்து அந்த காவலர்கள் நழுவிச் சென்றனர். இதுமாதிரியான சம்பவங்கள் கேரளாவில் தொடர் கதையாகிய நிலையிலேயே காவல்துறையே இந்த பணியில் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அதாவது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்பது தற்போதைய சம்பவத்தின் வாயிலாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இனி வரும் நாட்களில் காவல்துறையைச் சேர்ந்தவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிவது தொடங்கி, அனைத்து போக்குவரத்து விதிகளையும் கடைபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்று போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் கடுமயைாக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக மாறி இருக்கின்றது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது காவலர்களாக இருப்பின் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவது இப்போதும் தொடர் கதையாகி வருகின்றது. இதன் காரணத்தினாலேயே சில பகுதிகளில் பொதுமக்கள், காவல்துறை இடையே மோதல் ஏற்பட்ட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 23, 2023, 19:09 [IST]
English summary
Police officials fined for driving without seatbelt
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X