சல்யூட்! பேய் மாதிரி கார் ஓட்னது யார்னு தெரிஞ்சும் சட்டையை பிடித்த போலீஸ்! ஸ்டேஷனுக்கே தூக்கீட்டு வந்துட்டாங்க

இந்திய சாலைகளில் முன்பெல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார்களை பார்ப்பது என்பது அரிதான ஒரு விஷயமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது சென்னை (Chennai), பெங்களூர் (Bangalore), ஐதராபாத் (Hyderabad) மற்றும் மும்பை (Mumbai) போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாது, சிறு நகரங்களிலும் கூட விலை உயர்ந்த கார்களை சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

ஆனால் இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், விலை உயர்ந்த கார்களின் உரிமையாளர்கள் பலர், கண்மூடித்தனமாக ஓட்டுவதுதான். இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று ஐதராபாத் நகரில் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது 2 வைரல் வீடியோக்கள் (Viral Videos) வேகமாக பரவி வருகின்றன.

Lamborghini Huracan Porsche Cayenne Rash Driving

இதில் ஒரு வீடியோவில் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) கார் கண்மூடித்தனமாக ஓட்டப்படுவதையும், மற்றொரு வீடியோவில் லம்போர்கினி ஹூராகேன் (Lamborghini Huracan) கார் கண்மூடித்தனமாக ஓட்டப்படுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலைகளில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த 2 வீடியோக்களும் வைரல் ஆனதையடுத்து, காவல் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். இதில், இந்த 2 கார்களும், வெங்கட் சாய் ரெட்டி மற்றும் கார்த்திக்கேயா என்பவர்களுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேருமே, ரியல் எஸ்டேட் தொழில் (Real Estate Business) செய்து வருகின்றனர்.

தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்பதால், பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வெறும் வழக்கு பதிவு செய்ததுடன் நிற்காமல், போர்ஷே கேயென்னே காரை காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

அதே நேரத்தில் லம்போர்கினி ஹூராகேன் காரின் உரிமையாளர் தற்போது துபாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இந்த நோட்டீஸில் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஏனெனில் இது போன்ற நிகழ்வுகளை கண்டும் காணாதது போல் இருந்து விட்டால், இன்னும் பலர் சேட்டைகளில் ஈடுபட தொடங்கி விடுவார்கள். யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ரேஸ் டிராக் போன்ற இடங்களில் வேகமாக வாகனம் ஓட்டுவதை தவறு என சொல்ல முடியாது.

ஆனால் பலரும் பயன்படுத்தும் பொது சாலைகளில் இப்படி கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற விலை உயர்ந்த கார்கள் விபத்தில் சிக்கினால், பழுது பார்க்கும் செலவுகளை, அதன் உரிமையாளர்கள் எளிதாக செய்து விடுவார்கள். ஆனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டால், அந்த பாதிப்பில் இருந்து அவர்களோ அல்லது அவர்களது குடும்பமோ மீண்டு வருவது கடினம்.

'பேஷன்' என்ற பெயரில் பொது சாலைகளில் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட போர்ஷே கேயென்னே காரின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என தெரிகிறது. மறுபக்கம் லம்போர்கினி ஹூராகேன் காரின் மதிப்பு 4 அல்லது 5 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 20, 2024, 20:02 [IST]
English summary
Police seize porsche cayenne rash driving viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+