பைக்குடன் சேர்த்து உரிமையாளரையும் ‘தூக்கிய’ டிராபிக் போலீஸ்

Written By:

போக்குவரத்து நிறைந்த சாலைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்ய காவல்துறையினர் அனுமதிப்பதில்லை. அதையும் மீறி பார்க்கிங் செய்வோரின் வாகனங்களை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவர்.

பின்னர், நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்கான அபராதத் தொகையை காவல்துறையினர் வசூலித்த பின்னர் தூக்கிவந்த வாகனங்களை விடுவிப்பர். இது தான் வாடிக்கையாக நாம் சந்திக்கும் நிகழ்வு. ஆனால் நோ பார்க்கிங்கில் நின்ற ஒருவரின் வாகனத்தோடு, அதன் உரிமையாளரையும் தூக்கிச்சென்ற வினோத சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரின் போக்குவரத்து நிறைந்த சாலையோரத்தில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்துள்ளார். ஆனால் அது வாகனங்களை நிறுத்த அனுமதியில்லாத 'நோ பார்க்கிங்' பகுதியாகும்.

பின்னர், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை தங்களது காவல் வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளனர். அதற்கு சம்மதிக்க மறுத்த வாகன உரிமையாளர் அபராதம் செலுத்தவும் மறுத்துள்ளார். வாகன உரிமையாளருடனான வாக்குவாதத்திற்கு பின்னர் அதிரடி முடிவிற்கு வந்தனர் காவல்துறையினர்.

வாகனத்தையும் தர மறுத்து, அபராதமும் செலுத்த மறுத்ததால், அந்த இருசக்கர வாகனத்தை அதன் உரிமையாளர் அமர்ந்த நிலையிலேயே தங்கள் காவல் வாகனத்தில் தூக்கிச் சென்றுள்ளனர் போக்குவரத்து காவல்துறையினர். இதை அந்த இருசக்கர உரிமையாளரின் நண்பர் வீடீயோவாக எடுத்து சமூக வலத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி விட்டது.

போக்குவரத்து காவல்துறை 'தூக்கிய; வைரல் வீடீயோ இதுதான்:

ஸ்போர்ட்ஸ் மாடாலான மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரின் படங்கள்: 

English summary
The incident occurred in the Bada Chauraha area of Kanpur city.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark