வட இந்தியாவில் தான் இப்படிப்பட்ட போலீஸாரை அதிகம் பார்க்க முடியுது!! பேஸிக் அறிவு இருந்தாலே போதும் இதை தவிர்க்க

பொது மக்களுக்கு அறிவுரை வழங்கும் போலீஸாரே இப்படி செய்யலாமா என கேட்க தோன்றும் அளவிற்கு ஹரியானா மாநில போலீஸார் தாங்கள் ரோந்து வாகனங்களுக்காக பயன்படுத்தும் இன்னோவா காரை தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பார்க்க திசையில் ஆபத்தான முறையில் ஓட்டியுள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.

எதிர்பக்க சாலையில் வாகனம் ஓட்டுவது எந்தவொரு சமயத்திலும் ஆபத்தானதே. ஆனால், நம் இந்தியாவில் வாகன ஓட்டிகள் அசால்ட்டாக சாலையின் எதிர் திசையில் பயணிப்பதை பரவலாக பார்க்க முடியும். மனிதன் முதன்முதலாக சாலையை பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை உள்ளது. இன்னும் சொல்லப்போனால், கிராம புறங்களில் பெரும்பாலானோர்க்கு இப்போதும் கூட சாலையின் எந்த பக்கத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்பது தெரிவதில்லை.

police car on wrong way

ஆனால், இந்த விதிமுறைகளை கிராம புறங்களை காட்டிலும், வாகனங்கள் அதிகமாக இயங்கும் நகர்புறங்களில் தான் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் ஆகும். பல்வேறு விபத்து சம்பவங்களில் விபத்திற்கு காரணம் என்னவென்று பார்த்தால், இவ்வாறு யாரோ ஒருவர் சாலையின் எதிர் திசையில் வாகனம் ஓட்டி வந்ததாகவே இருக்கும். அதாவது, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வரும் வாகனத்தை மிக நெருக்கமாக வந்த பின்பே கவனிக்கும் வாகன ஓட்டிகள், அவர்கள் மீது மோதிவிட கூடாது என்பதற்காக தங்களது வாகனத்தை வேறு பக்கம் திருப்புவர்.

இவ்வாறு திருப்பப்பட்ட வாகனத்தினால் மிக பெரிய விபத்து கூட அரங்கேறி இருப்பதை பார்த்திருக்கும். ஆனால், இதையெல்லாம் நன்கு அறிந்தும் ஹரியானா மாநிலத்தில் போலீஸார் தங்களது ரோந்து வாகனமான டொயோட்டா இன்னோவா காரை பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்றில் எதிர்திசையில் இயக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து டுவிட்டரில் வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்.

இந்த வீடியோவை கார் ஓட்டி ஒருவர் தனது காரின் டேஸ்போர்டில் இருந்த கேமரா மூலமாக காட்சிப்படுத்தி உள்ளார். வீடியோவில், பாலம் ஒன்றின் வழியாக வீடியோவை காட்சிப்படுத்திய கார் சென்று கொண்டிருந்த போது வாகனங்களை மோதும் விதமாக போலீஸாரின் இன்னோவா கார் வந்துள்ளது. நெடுஞ்சாலையின் வேறு எந்த பகுதியில் இப்படி எதிர்திசையில் வாகனம் வந்தால் கூட ஓரளவிற்கு சமாளித்து விடலாம்.

ஆனால் இந்த சம்பவத்தில், பாலம் ஒன்றில் நெடுஞ்சாலை குறுகலாக இருக்கும் பகுதியில் போலீஸாரின் கார் வந்துள்ளது. சரியாக அந்த சமயத்தில், நெடுஞ்சாலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் சென்றுள்ளன. வீடியோவை காட்சிப்படுத்தியவரின் கார் போலீஸாரின் காருக்கு மிக நெருக்கமாக, உரசுவது போல் செல்வதை வீடியோவில் காணலாம்.

இவ்வாறு செல்வதால் மோதல்கள் ஏற்படாதா? என அந்த போலீஸாரிடம் கேட்டதற்கு, "அது எப்படி மோதல் ஏற்படும்?" என அவர் நம்மை திருப்பி கேள்வி கேட்கிறார். ஹரியானா மாநில போலீஸார் இவ்வாறு சாலையின் எதிர்பக்க திசையில் பயணிப்பது வழக்கமான ஒன்றே. இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் கூட, இவ்வாறு நெடுஞ்சாலையில் எதிர்பக்க திசையில் சென்றதினால் போலீஸ் கார் ஒன்று மோதலுக்கு உள்ளானது. அதனை கீழே காணலாம்.

police car on wrong way

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நெடுஞ்சாலையில் இவ்வாறு நடப்பதே இல்லை என பொய் சொல்ல முடியாது. ஏனெனில் நம் ஊரிலும் இவ்வாறு இயங்கும் வாகன ஓட்டிகள் இருக்க தான் செய்கின்றனர். ஆனால் போக்குவரத்தை சீர்ப்படுத்த வேண்டிய போலீஸாரே இவ்வாறு மற்ற வாகனங்களை மோதுவதுபோல் நெடுஞ்சாலையில் பயணித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 17, 2023, 19:19 [IST]
English summary
Police toyota innova car on wrong way on highway video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+