சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

அரசு அதிகாரிகளின் வாகனங்களில் அதிரடி மாற்றம் ஒன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் வாகன ஓட்டிகள் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுகின்றனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் பயணம் செய்வது, அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது என இந்தியர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களை அடுக்கி கொண்டே போகலாம்.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வைக்க காவல் துறை தரப்பில் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது காவல் துறையினர் தற்போது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். எனினும் சில சமயங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளும், மேலும் சில சமூக விரோதிகளும் கோர்ட்களில் காவல் துறைக்கு எதிராக திரும்பி பொய் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

இந்த பிரச்னையை தவிர்க்க தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி உத்தர பிரதேச மாநிலம் பரேலி டிவிசனில், அரசு வாகனங்களின் முன்பும், பின்பும் உயர்தரமான கேமரா பொருத்த தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து எஸ்எச்ஓக்கள் (Station House Officers - SHOs) மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் அரசு வாகனங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

சந்தேகத்திற்கிடமான அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிப்பதற்காகவே அரசு வாகனங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. சமூக விரோத செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணிக்க இந்த கேமராக்கள் உதவி செய்யும். மேலும் இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் நீதிமன்றங்களில் விசாரணையின்போது, சாட்சியாகவும் பயன்படும்.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

100 மீட்டருக்கும் மேலான தொலைவில் இருந்தும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறனை இந்த கேமராக்கள் பெற்றுள்ளன. பரேலி மண்டலத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ''கேமராக்களை கொள்முதல் செய்ய 3 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

தற்போது முதற் கட்டமாக சோதனை அடிப்படையில்தான் இதனை செயல்படுத்துகிறோம். இதன் முடிவுகள் நல்ல விதமாக வரும்பட்சத்தில், அனைத்து அரசு வாகனங்களிலும் கேமராக்களை பொருத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை பிடிக்கும் வழக்குகளில், சாட்சியங்கள் வலுவாக இருப்பது நல்லது.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

அதாவது சம்பந்தப்பட்ட ஓட்டுனரின் வீடியோ காட்சிகள் இருந்தால் நல்லது. ஏனெனில் காவல் துறையினர் வேண்டுமென்றே என் மீது நடவடிக்கை எடுக்கின்றனர் என அவர்களால் நீதிமன்றத்தில் மறுத்து பேச முடியாது. அதேபோல் குற்றவாளிகளின் வாகனங்களை போலீசார் சேஸ் செய்து சென்றாலும், அங்கு நடப்பவை எல்லாம் பதிவு செய்யப்படும்.

சூப்பர் உத்தரவு... அரசு அதிகாரிகளின் வாகனங்களில் நடக்க போகும் அதிரடி மாற்றம்... என்னனு தெரியுமா?

இதனை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். தற்போதைய நிலையில் வாகனத்தின் முன்பும், பின்பும் கேமராக்களை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வாகனத்திற்கு உள்ளே என்ன நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள வசதியாக கூடுதலாக ஒரு கேமராவை இன்ஸ்டால் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Police Vehicles In Bareilly To Be Equipped With High-Resolution Cameras. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X