80, 90களில் பிசியாக வலம்வந்த நடிகையா இது? சுத்தமா அடையாளமே தெரியல... புது காரின் விலையை கேட்டால் மயக்கம் வருது

எலக்ட்ரிக் கார்களுக்கு மெல்ல மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது. மற்றவர்களை காட்டிலும் அட்வான்ஸான வாகனங்களை வாங்க விரும்புவோரின் சாய்ஸாக எலக்ட்ரிக் வாகனங்கள் மாறி வருகின்றன. குறிப்பாக, ஏற்கனவே சில கார்களை வைத்திருக்கும் விஐபி-கள் எலக்ட்ரிக் வாகனங்களை தைரியமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், அரசியலிலும் ஈடுப்பட்டுவரும் நடிகை ஒருவர் மார்க்கெட்டில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரை தற்போது வாங்கியுள்ளார். யார் அவர் என்பதை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

எலக்ட்ரிக் கார்களுக்கு இன்னமும் இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லை என்றாலும், புது, புது எலக்ட்ரிக் கார்களும், அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்துள்ளன. அவ்வாறு, 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் இறங்கிய சீன நிறுவனம், பிஒய்டி ஆகும்.

politician tara buys byd seal

2007ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவில் செயல்படுகிறது என்றாலும், 2021ஆம் ஆண்டில்தான் தனது முதல் இ6 எலக்ட்ரிக் காரை பிஒய்டி அறிமுகம் செய்தது. அதன்பின், 2022இல் அட்டோ 3 என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி காரை பிஒய்டி அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், இந்த 2024ஆம் வருடத்தில் பிஒய்டி டீல் என்கிற எலக்ட்ரிக் செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்குமுன் அறிமுகம் செய்யப்பட்ட பிஒய்டி எலக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடுகையில், சீல் ஆனது சற்று விலையுயர்ந்த காராக விளங்குகிறது.

இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.41 லட்சத்தில் இருந்து ரூ.53 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகைய விலையுயர்ந்த எலக்ட்ரிக் காரை தற்போது வாங்கியிருக்கும் நடிகை வேறு யாருமில்லை, நாயகன், அக்னி நட்சத்திரம் உள்ளிட்ட பிரபலமான திரைப்படங்களில் குணாச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த நடிகை தாரா ஆவார். இவரது நிஜ பெயர், அனுராதா ஆகும்.

politician tara buys byd seal

மேற்கூறப்பட்டவை மட்டுமின்றி, மாற்றான் படத்தில் நடிகர் சூர்யாவின் அம்மா கதாபாத்திரம், நடிகர் விக்ரம் பிரபுவின் சத்ரியன் திரைப்படத்திலும் நடிகை தாரா நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், இவர் நடித்த முதல் படம், 1984இல் வெளியான இங்கேயும் ஒரு கங்கை என்கிற தமிழ் படம் ஆகும். இருப்பினும், தாரா ஓர் கன்னட நடிகை ஆவார். 1973இல் பெங்களூரில் பிறந்தவரான நடிகை தாரா எனப்படும் அனுராதா 2009இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

அதனை தொடர்ந்து, 2012இல் கர்நாடக திரைப்பட துறையின் தலைவர் பொறுப்பு தாராவை தேடி வந்தது. இதுமட்டுமின்றி, கர்நாடக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தலைவராகவும் இருந்துள்ளார். இவ்வாறு பல பொறுப்புகளையும், அதேநேரம் சினிமாவையும் கவனித்துவரும் நடிகை தாரா தற்போது கணவர் வேணுகோபால் மற்றும் மகனுடன் ஷோரூமுக்கு சென்று பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளார்.

politician tara buys byd seal

மேலும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தாரா வெளியிட்டுள்ளார். மார்க்கெட்டில் டைனாமிக், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் என்கிற 3 விதமான வேரியண்ட்களில் பிஒய்டி சீல் எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. நடிகை தாரா வாங்கியிருப்பது, ரூ.53 லட்சம் விலை கொண்ட பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட் ஆகும். இதில் ட்யூயல்-மோட்டார் செட்-அப் வழங்கப்படுகிறது.

அதுவே டைனாமிக் வேரியண்ட்டில் சிங்கிள்-மோட்டார் மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல், பிரீமியம் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் வேரியண்ட்களில் அளவில் பெரியதான 82.56kWh பேட்டரியும், டைனாமிக் வேரியண்ட்டில் 61.44kWh பேட்டரியும் பொருத்தப்படுகிறது. நடிகை தாரா வாங்கியிருக்கும் சீல் பெர்ஃபார்மன்ஸ் காரில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 580கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் காரை வாங்க நினைப்பவர்களில் நிறைய பேரது கவனம் பிஒய்டி சீல் கார் மீது இருக்காது. ஏனெனில், இந்த எலக்ட்ரிக் கார் மிக சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நடிகை தாரா இந்த எலக்ட்ரிக் காரை வாங்கியிருப்பதற்கு காரணம், இவரிடம் ஏற்கனவே பிஒய்டி இமேக்ஸ் 7 என்கிற எலக்ட்ரிக் கார் இருப்பதாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 26, 2024, 17:20 [IST]
English summary
Politician actress tara buys byd seal electric sedan car check price features all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X