பா.ஜ.வின் அசூர வெற்றிக்கு இந்த கார்கள் தான் காரணம்! எப்படி தெரியுமா?
இன்று நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் மூன்று மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்ய மற்றும் தேர்தல் பணிகளுக்கான பயணங்களுக்கு குறிப்பிட்ட சில கார்களை அதிகம் பயன்படுத்தினார்கள். அதைப்பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.
இன்று மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சட்டீஸ்கர், ஆகிய மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிகளுக்கு பின்னால் அரசியல்வாதிகள் செய்த உழைப்பு மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் இந்த தேர்தலுக்காக பயணம் செய்த கார்களைப் பற்றி இங்கே காணலாம்.

டொயோட்டா ஃபார்ச்சூனர்: இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் இந்த காரை தான் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் என இந்த காரில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது.
இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. முக்கியமாக வென்டிலேட்டர் சீட்டுகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், க்ரூஸ் கண்ட்ரோல், உள்ளிட்ட ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ரூ 33.43 லட்சம் முதல் ரூ 51.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா: ஃபார்ச்சூனர் காருக்கு அடுத்தபடியாக அரசியல்வாதிகள் அதிகம் பயன்படுத்தும் கார் டொயோட்டா இன்னோவா கிரைஸ்டா கார் தான். இந்திய சாலைகளில் தேர்தல் என்றாலே இந்த கார் மிக முக்கிய பங்கை வகித்து விடும். அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பலர் இந்த காரை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ் மற்றும் இசட் எக்ஸ் ஆகிய நான்கு வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரின் விலையை பொருத்தவரை 19.99 லட்சம் முதல் 26.05 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் உள்ள அதிக இட வசதி நீண்ட தூர பயணத்திற்கான வசதி அதிக நபர்களை ஏற்று செல்லும் வசதி உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகள் இருப்பதால் அரசியல்வாதிகள் இந்த காரை அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர்.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்: டொயோட்டா இன்னோவா காரை விரும்பும் பலர் இந்த ஹைகிராஸ் காரையும் விரும்புகின்றனர். இந்த கார் சமீபத்தில் தான் அறிமுகமானது. இதனால் 2023 ஆண்டு நடக்கும் இந்த தேர்தலில் தான் இந்த கார் முதல் முறையாக அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் ஸ்டிராக் ஹைபிரிட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் முக்கியமாக டொயோட்டாவின் அடாஸ் தொழில்நுட்பம் எனப்படும் டொயோட்டா சேஃப்டி சென்ஸ் தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் லேண் கீப் அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரியல் ட்ராபிக் அலர்ட் மற்றும் ப்ரீ கொல்யூஷன் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இன்னோவா கிரைஸ்டா காரை விட அதிக பிரீமியம் டிசைன் அம்சங்கள் நிறைந்த காராக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ என்: அரசியல்வாதிகளுக்கு அடுத்த முக்கியமான காராக மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார் இருக்கிறது. இந்த காரை பொருத்தவரை 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கின்றன. இதில் பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 23 எச்பி பவரையும் 37 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் உள்ளன. டீசல் இன்ஜினை பொருத்தவரை 175 எச்பி பவர் மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் விலையை பொறுத்தவரை 13.26 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 700: இந்தியாவில் நீண்ட கால காத்திருப்பு பட்டியலில் இருக்கும் காரில் ஒன்றாக இந்த காரும் இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுப்பதால் இந்த காரை அரசியல்வாதிகள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் எம் ஸ்டாலின் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 200 எச்பி பவரையும் 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த கார் ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் ஆப்ஷனாக 2.2 லிட்டர் எம் ஹாக் டர்போ சார்ஜர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 155 எச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதில் எம்எக்ஸ் வேரியண்டில் சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இருக்கிறது. ஏஎக்ஸ் வேரியண்ட் காரில் அதிக பவரை வெளிப்படுத்தும் 185 எச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா பொலிரோ: மஹிந்திரா பொலிரோ காரின் அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் அதிகம் விரும்பப்படும் காராக இருக்கிறது.இந்த காரும் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்தது. இது ஒரு 7 சீட்டர் எஸ்யூவி காராகவும் இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.5 லிட்டர் எம்ஹாக் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இது 75 எச்பி பவரையும் 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட இன்ஜினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலையை பொறுத்தவரை 9.78 லட்சம் முதல் 10.79 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அரசியல்வாதிகள் பலர் குறிப்பிட்ட கார்களை அதிகம் விரும்புகின்றனர். சமூகத்தில் அந்தஸ்தையும், அதே நேரம் பயணத்திற்கு பல வசதிகளையும் கொண்ட கார்களை அரசியல் வாதிகள் விரும்புகின்றனர். அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு கார் ஹிட்டாகிவிட்டால் அந்த கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கும்.


Click it and Unblock the Notifications









