றெக்கை இல்லாத தேவதை! 5 கோடி ரூபாய் காரில் வந்து இறங்கியது அவங்களா! அழகுல எல்லாரையும் கெறங்கடிச்சுட்டாங்க!
நவராத்திரி (Navaratri) பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலர் புதிய கார் (Car) மற்றும் பைக்குகளை (Bike) வாங்கி வருகின்றனர். திரைப்பட துறையை சேர்ந்த நடிகர், நடிகைகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
பிரபல பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor), மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் டெக்னிகா (Lamborghini Huracan Tecnica) காரை வாங்கிய செய்தியை, டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கடந்த ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு வாசகர்களுக்கு வழங்கியிருந்தது.

இந்த சூடு தணிவதற்குள் நமக்கு மற்றொரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அது நமக்கு நன்கு பரிட்சயமான பூஜா ஹெக்டே (Pooja Hegde) பற்றியதாகும். தமிழில் விஜய் (Vijay) நடிப்பில் உருவான பீஸ்ட் (Beast) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பூஜா ஹெக்டே.
இவர் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) கார் ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது. இந்த காரில் பூஜா ஹெக்டே வந்து இறங்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளம் மூலம் வெளியாகியுள்ள இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் 'ஹார்ட்' எமோஜிக்களை பறக்க விட்டு கொண்டுள்ளனர். ஏனெனில் மிகவும் அழகான உடையில் ஒரு தேவதையை போன்று பூஜா ஹெக்டே வந்து இறங்கியுள்ளார். ஆனால் அவர் வந்தது என்ன இடம்? என்பது சரியாக தெரியவில்லை.
இந்த செய்தியின் முடிவில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கலாம். லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரில் அதிநவீன வசதிகளுக்கு (Features) கொஞ்சம் கூட பஞ்சமில்லை. இதில், 35 ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், 13.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை மிகவும் முக்கியமானவை.
இவை எல்லாம் தவிர ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பின் இருக்கைகளுக்கும் பொழுதுபோக்கு திரைகள் ஆகிய வசதிகளும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களுமே இருக்கின்றன.
இந்த காரின் பெட்ரோல் வெர்ஷன்களில் 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 3.0 லிட்டர் பெட்ரோல் PHEV இன்ஜின் ஒன்றாகும். இதில், PHEV என்பது Plug-In Hybrid Electric Vehicle என்பதை குறிக்கிறது. மற்றொன்று 4.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் ஆகும்.
அதே நேரத்தில் இந்த காரின் டீசல் வெர்ஷன்களில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப விலை 2.39 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
ஆனால் இதில் எந்த வேரியண்ட்டை பூஜா ஹெக்டே வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும் அவர் டாப் வேரியண்ட்டை வாங்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வாங்கியது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் டாப் வேரியண்ட் ஆக இருந்தால், அதன் ஆன் ரோடு விலை சுமார் 5 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பூஜா ஹெக்டேவின் கார் கலெக்ஸன் (Car Collection) ஏற்கனவே மிகவும் பெரியதாக உள்ளது. ஆடி க்யூ7 (Audi Q7), பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-series) மற்றும் போர்ஷே கேயென்னே (Porsche Cayenne) உள்பட பல்வேறு கார்களை அவர் வைத்துள்ளார். இந்த வரிசையில் தற்போது பூஜா ஹெக்டேவை சுமந்து செல்லும் பாக்கியம், லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காருக்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications