சலூன் கடைக்கு வந்துட்டு போகவே 4 கோடி ரூபா காரா! விஜய் கூட ஒரு படம் நடிச்சதுக்கே தமிழ்நாட்ல எங்கயோ போயிட்டாங்க!

இந்தியாவில் சொகுசு கார்களை அதிகளவில் வாங்குபவர்களில், திரையுலக நட்சத்திரங்கள் மிகவும் முக்கியமானவர்களாக உள்ளனர். தொழில் அதிபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் திரையுலக நட்சத்திரங்களும் சொகுசு கார்களை அதிகளவில் வாங்குகின்றனர். இதில், ஒரு சில திரையுலக நட்சத்திரங்களின் சொகுசு கார் கலெக்ஸன் (Luxury Car Collection) மிகவும் பெரியது. குறிப்பாக பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின் சொகுசு கார் கலெக்ஸன் மிகவும் பெரியதாக இருக்கிறது. இதற்கு பூஜா ஹெக்டே (Pooja Hegde) ஒரு உதாரணம்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் தமிழை பொறுத்தவரையில் முகமூடி மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுதவிர சூர்யா உடன் ரெட்ரோ, விஜய் உடன் ஜனநாயகன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

Pooja Hegde Spotted In Range Rover Vogue

இந்தியாவின் முன்னணி நடிகர்கள் உடன் நடிப்பதால், பூஜா ஹெக்டேவின் சம்பளம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது. தற்போது வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு பூஜா ஹெக்டே 3.5-5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக தெரிகிறது.

எனவே பூஜா ஹெக்டேவின் கார் கலெக்ஸன் மிகவும் பெரியதாக உள்ளது. போர்ஷே கேயென்னே (Porsche Cayenne), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) உள்ளிட்ட மிகவும் விலை உயர்ந்த கார்களை எல்லாம் பூஜா ஹெக்டே வைத்துள்ளார்.

Pooja Hegde

இந்த சூழலில், மிகவும் விலை உயர்ந்த மற்றொரு காரில் பூஜா ஹெக்டே பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மும்பையில் உள்ள ஒரு சலூனுக்கு வந்து சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோவில் நாம் பார்ப்பது ரேஞ்ச் ரோவர் வோக் (Range Rover Vogue) கார் போல் தெரிகிறது. இந்த காரின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் பூஜா ஹெக்டேவின் சொந்த கார்தான் என கூறப்படுகிறது. மிகவும் விலை உயர்ந்த இந்த காரில், 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 296 பிஹெச்பி பவரையும், 1,500-2,000 ஆர்பிஎம்மில் 650 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஒரு கார் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக பூஜா ஹெக்டே உள்ளார். அத்துடன் விளம்பரங்களில் நடிப்பதன் மூலமாகவும் அவருக்கு வருமானம் கிடைக்கிறது. எனவே அவர் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

கடந்த 2012ம் ஆண்டு வெளியான முகமூடி தமிழ் படத்தின் மூலம்தான் பூஜா ஹெக்டே திரையுலகிற்கே வந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு போதிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் 2022ம் ஆண்டு வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, தமிழ் மொழியில் பூஜா ஹெக்டேவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ரெட்ரோ, ஜனநாயகன் ஆகிய தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது, காஞ்சனா 4 தமிழ் திரைப்படத்திலும் பூஜா ஹெக்டே தற்போது நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 14:25 [IST]
English summary
Pooja hegde spotted in range rover vogue in mumbai saloon viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+