சொகுசு கார்ல இருந்து இறங்கியவரை பாத்ததும் கிறங்கி போன இளசுகள்! மிடில்-க்ளாஸா பொறந்து பெரிய ஆளா ஆயிருக்காங்க!

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வந்த கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes Benz CLA). ஆனால் இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சிஎல்ஏ காரின் விற்பனையை நிறுத்தி விட்டது. அதற்கு பதிலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் (Mercedes Benz A-Class Limousine) கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

ஆனால் இன்னமும் ஒரு சிலர் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரை பயன்படுத்தி கொண்டுதான் உள்ளனர். இதில், பூனம் பாண்டே (Poonam Pandey) குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பாலிவுட் திரை உலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமூக வலை தளங்களில், கவர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதன் காரணமாகவே பூனம் பாண்டே மிகவும் பிரபலமானவராக மாறினார்.

Poonam Pandey Spotted In Mercedes Benz CLA

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் இவரை சுமார் 40 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மிடில்-க்ளாஸ் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கூட, பூனம் பாண்டேவிடம் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கார் ஒன்று உள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்த கார் தற்போது விற்பனையில் இல்லை.

இருப்பினும் கடைசியாக விற்பனையில் இருந்தபோது, 31.72 லட்ச ரூபாய் முதல் 77.69 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்தியாவில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.

Mercedes Benz CLA

அவை 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகியவை ஆகும். இதில், பூனம் பாண்டேவிடம் இருப்பது பெட்ரோல் வேரியண்ட்டா? அல்லது டீசல் வேரியண்ட்டா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் நீண்ட காலமாகவே அவர் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரை பயன்படுத்தி வருகிறார்.

எனவே அவ்வப்போது அவரை இந்த காரில் பார்க்க முடியும். இந்த வரிசையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரில் பூனம் பாண்டே வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், மிகவும் கவர்ச்சிகரமான உடையில், பூனம் பாண்டே மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரில் இருந்து இறங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

பூனம் பாண்டேவிடம் மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ மட்டுமல்லாது, மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class), பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5 Series) ஆகிய கார்களும் இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரிலும் பூனம் பாண்டேவை அடிக்கடி பார்க்க முடிந்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ காரின் வேரியண்ட் தெரியவில்லை என்றாலும் கூட, பூனம் பாண்டேவின் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரில் பொருத்தப்பட்டிருப்பது 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆகும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 190 ஹெச்பி பவர் மற்றும் 400 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலமாக காரின் பின் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

இது சொகுசு மற்றும் செயல்திறன் என இரண்டும் கலந்த ஒரு கலவை ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு வெறும் 7.5 வினாடிகளை மட்டுமே இந்த கார் எடுத்து கொள்ளும். அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 235 கிலோ மீட்டர்கள் ஆகும்.

மறுபக்கம் பூனம் பாண்டேவிடம் உள்ள மற்றொரு காரான மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் தற்போதைய நிலையில் 78.50-92.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த ஒரு கார் ஆகும்.

Take a Poll

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பூனம் பாண்டேவின் சொகுசு கார் கலெக்ஸன் (Luxury Car Collection), அவர் தீவிரமான கார் காதலர் என்பதை நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆபாசம் காரணமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, சொகுசு கார்கள் விஷயத்தில் பூனம் பாண்டே ரசனை மிக்கவராகவே உள்ளார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 17:46 [IST]
English summary
Poonam pandey spotted in mercedes benz cla viral video read full details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+