டாடா கார்ல வந்த இவங்க ஆபாச படத்துல நடிக்கறவங்களா! இந்த மாதிரி டிரெஸ்ல இவங்களை பாக்கறதுலாம் அபூர்வம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா சஃபாரி (Tata Safari). தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 15.50 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 27.25 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த காரில் பிரபல நடிகை ஒருவர் வந்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது பூனம் பாண்டே (Poonam Pandey) ஆவார். பிரபல நடிகையான இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். வழக்கமான திரைப்படங்கள் மட்டுமல்லாது, ஆபாச திரைப்படங்களிலும் பூனம் பாண்டே நடித்துள்ளார். இதன் காரணமாக இவர் மீது பல்வேறு சர்ச்சைகளும் இருக்கின்றன.

இந்த வரிசையில் தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவும், பூனம் பாண்டேவை சுற்றி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ஆம், இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பூனம் பாண்டே வந்தபோதுதான் இந்த வைரல் வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பூனம் பாண்டேவை அழைத்தது யார்? என நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் இன்னும் ஒரு சிலரோ, முதல் முறையாக பூனம் பாண்டேவை நல்ல உடையில் பார்ப்பதாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

பூனம் பாண்டே வந்து இறங்கிய டாடா சஃபாரி கார், நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருவதாகும். இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) உள்ளிட்ட கார்களுடன் டாடா சஃபாரி போட்டியிட்டு வருகிறது.
மிகவும் பிரபலமான காராக இருந்தாலும் கூட, ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷனில் மட்டுமே டாடா சஃபாரி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன்தான் என்றாலும் கூட, டாடா சஃபாரி காரில் மொத்தம் 2 கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகியவை ஆகும். இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும்.
ஏனெனில் குளோபல் என்சிஏபி (Global NCAP) மற்றும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) என 2 அமைப்புகளின் மோதல் சோதனைகளிலும் (Crash Test), டாடா சஃபாரி கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5-star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் அதிக இடவசதி கொண்ட, வசதிகள் நிரம்பிய ஒரு பாதுகாப்பான எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என நினைத்தால், அதற்கு டாடா சஃபாரி மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைப்பது கூடுதல் பலம்.


Click it and Unblock the Notifications








