பூந்தமல்லி- போரூர் சென்னை மெட்ரோ பணிகள் துவங்கும் தேதி அறிவிப்பு! என்னென்ன நடக்கப்போகுது தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயில் புராஜெக்டின் 2ம் கட்ட பணியாக பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ பணிகள் வரும் ஜூலை மாதம் துவங்கப்படவுள்ளது. இந்த ரூட்டில் வரும் 2025ம் ஆண்டு மெட்ரோ ரயில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களில் மெட்ரோ பணிகள் முடிவடைந்து மெட்ரோ பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. அப்படியாக மெட்ரோ பயன்பாட்டில் இருக்கும் நகரங்களில் சென்னையும் ஒன்று தற்போது சென்னையில் முதற்கட்ட மெட்ரோ பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது.

தற்போது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்காக ரூ61,843 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 118.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. இதில் ஒரு லைனாக சென்னை பூந்தமல்லியிலிருந்து சென்னை லைட்ஹவுஸை இணைக்கும் வகையில் மெட்ரோ பாதை அமைக்கப்படவுள்ளது. இது இரண்டு கட்டங்களாக அமைக்கப்படவுள்ளது.
பூந்தமல்லியிலிருந்து லைட் ஹவுஸ் வரையில் உள்ள மொத்த திட்டத்தை இரண்டாகப் பிரித்து பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை ஒரு கட்டமாகவும், போரூலிருந்து லைட் ஹவுஸ் வரை ஒரு திட்டமாகவும் தனித்தனியாகக் கட்ட தனித்தனி காண்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்ட பணிகள் வரும் ஜூலை மாதம் பூந்தமல்லி போரூர் இடையே துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மொத்தம் 3 காரிடார்களில் மெட்ரோ பணிகள் நடக்கவுள்ளது. அதில் ஒன்று தான் பூந்தமல்லி-லைட் ஹவுஸ் மெட்ரோ திட்டம். இது போக மாதவரம் - சிப்காட், மாதவரம் சோழிங்கநல்லூர் ஆகிய பாதைகள் வேறு இருக்கிறது. இந்த திட்டம் முழுமையாக முடிவடைய 7 ஆண்டுகள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கட்டமாக பணிகள் முடிய முடிய மெட்ரோ ரயில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் அதன் பின் பணிகள் முடிய முடிய ரயில் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி - லைட்ஹவுஸ் மெட்ரோவில் பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட், முல்லை தோட்டம், கரையான் சாவடி, குமணன் சாவடி, காட்டுபாக்கம், ஐயப்பன் தாங்கல் பஸ் டிப்போ, ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை பைபாஸ் கிராஸிங், போரூர் ஜங்சன், ஆலம்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், அவிச்சி ஸ்கூல், சாலி கிராமம், வடபழனி, பவர் ஹவுஸ், மீனாட்சி காலேஜ், கோடம்பாக்கம், பனகல் பார்க், நடேசன் பார்க், நந்தனம், அடையார் கேட் ஜங், பாரதி தாசன் ரோடு, திருமயிலை, குட்சேரி ரோடு, ஃபோர்ஷோர் ரோடு, லைட் ஹவுஸ் ஆகிய ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தில் உள்ள மாதவரம் - சிப்காட் தூரமும் 45.8 கி.மீ தூரமும், லைட் ஹவுஸ் - பூந்தமல்லி பைபாஸ் 26.1 கி.மீ தூரமும், மாதவரம் - சோழிங்கநல்லூர் 47 கி.மீ தூரமும் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இது எல்லாம் செயல்பாட்டிற்கு வர 2030ம் ஆண்டுவரை ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மெட்ரோவிற்கான தேவை அதிகம் இருக்கிறது. இதுவே மிக காலதாமதாக செயல்பாட்டிற்கு வருகிறது. இதனால் இதன் பணிகளைத் துரிதமாக்கி விரைவாக முழு மெட்ரோ திட்டத்தையும் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.


Click it and Unblock the Notifications
