இவங்க குடும்பத்தை பார்க்கவே பெரிய கூட்டம் கூடிருச்சு! 2023லேயே பெரிய சம்பவம் செய்த இந்திய தொழிலதிபர்!!
பூனாவல்லா (Poonawalla), இந்தியாவில் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர். பல லக்சரி கார்களுக்கு சொந்தக்காரரான இவரது குடும்பத்தினர் கடந்த 2023ஆம் ஆண்டில் மும்பை (Mumbai)-இல் நடைபெற்ற குதிரை பந்தயம் (Horse Race)-ஐ பார்க்க அல்ட்ரா லக்சரி கார்களில் வந்த வீடியோ (Video) தற்போது வைரலாகி வருகிறது. அப்படி எந்த மாதிரியான லக்சரி கார்களில் அப்போது பூனாவல்லா குடும்பம் வந்தது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்திய செல்வந்தர்களையும், விலையுயர்ந்த கார்களையும் பிரிக்கவே முடியாது என சொல்லலாம்.
அதிலிலும் பூனாவல்லா குடும்பத்தின் கேரேஜ் (Garage) முழுவதும் விலைமிக்க ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), பெண்ட்லீ (Bentley) மற்றும் ஃபெராரி (Ferrari) கார்கள் நிரம்பி வழிகின்றன. அவற்றுள் ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் (Phantom) மற்றும் பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Flying Spur) கார்களில் தான் பூனாவல்லாவின் குடும்பம் 2023இல் மும்பையில் நடைபெற்ற குதிரை பந்தயத்தை காண வந்தது.

முதலில் பூனாவல்லா குடும்பத்தை பற்றி பார்த்துவிடுவோம். இந்தியாவில் உள்ள மல்டி-மில்லியனர் குடும்பங்களுள் இவர்களது குடும்பமும் ஒன்றாகும். 1941ஆம் ஆண்டில் புனேவில் பிறந்த சிரஸ் பூனாவல்லா தான் இந்த மொத்தத்தையும் ஆரம்பித்து வைத்தார். தற்சமயம் அவரது மகன் அடார் பூனாவல்லா குடும்பத்தின் சாம்ராஜ்ஜியத்தை சரிய விடாமல் மேலும் மேலும் வளர்த்து வருகிறார்.
க்ளீன் எனர்ஜி (Clean Energy), அறக்கட்டளை (Foundation), விமான துறை (Avaition), உயிரியல் துறை (Biologicals) என பூனாவல்லா குழுமத்தில் இடம்பெறாத நிறுவனங்களே கிடையாது என சொல்லலாம். இதில் பூனாவல்லாவின் விமான துறை ஆனது 2005ஆம் ஆண்டில் வெறும் 3 விமானங்கள் உடன் செயல்பாட்டு வந்தது. ஆனால், இன்றோ திட்டமிடாத பயணங்களுக்கான விமான சேவையை வழங்கும் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

ஆகையால், இத்தகைய குடும்பம் குதிரை பந்தயத்தை பார்வையிட விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் பெண்ட்லீ கார்களில் வந்ததில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால், மும்பையில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த இந்த குதிரை பந்தயத்தை நடத்தியது பூனாவல்லா ரேசிங் மற்றும் ப்ரீடிங் க்ளப் (Racing & Breeding Club) ஆகும். பூனாவல்லா க்ளப்பில் இதேபோன்று நிறைய குதிரை பந்தயங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தங்களது க்ளப்பில் நடத்தப்படும் குதிரை பந்தயத்தை பார்வையிட பூனாவல்லா குடும்பம் வந்தது 2008இல் உருவாக்கப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 7 காரில் ஆகும். இது, பாண்டோம் 7வது ஜென்ரேஷன் காரின் முதல் சீரிஸ் மாடல் ஆகும். இதில் 6.75 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 460 பிஎஸ் மற்றும் 720 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் விளங்குகிறது.
பூனாவல்லா குடும்பத்தை சேர்ந்த சிலர் பெண்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் காரில் குதிரை பந்தயம் நடக்கும் இடத்திற்கு வந்திறங்கினர். இது, பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி (Continental GT) காரின் 4-டோர் கிராண்ட் டூரர் வெர்சன் ஆகும். இந்த பெண்ட்லீ காரில் 6.0 லிட்டர் டபிள்யூ12 ட்வின்-டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 560 பிஎஸ் மற்றும் 650 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
இதுதொடர்பான வீடியோவில், அடார் பூனாவல்லாவின் மாமா யோஹன் பூனாவல்லாவும் தனியாக ஒரு சில்வர் நிறத்திலான ரோல்ஸ்-ராய்ஸ் காரில் வருவதை பார்க்க முடிகிறது. இது ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் 8வது ஜென்ரேஷன் கார் ஆகும். இந்தியாவில் 8வது ஜென்ரேஷன் பாண்டோம் கார் அறிமுகம் செய்ய உடனே வாங்கிய முதல் கஸ்டமர்களுள் யோஹன் பூனாவல்லாவும் ஒருவர் ஆவார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாகவே, செல்வந்தர்கள் அவ்வப்போது தங்களது போக்குவரத்துக்கான லக்சரி கார்களை மாற்றிக் கொண்டே இருப்பர். மும்பையில் இந்த நிகழ்வு கடந்த 2023 அக்டோபரில் நடந்ததாகும். தற்போது மீண்டும் இவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்தால் இதே ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் மற்றும் பெண்ட்லீ ஃபிளையிங் ஸ்பர் காரில் இவர்கள் வருவார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், கடந்த 1 வருடத்தில் இவர்கள் தங்களது அன்றாட பயன்பாட்டு கார்களை மாற்றியிருக்கக்கூடும்.
Source: CS12Vlogs


Click it and Unblock the Notifications








