போப் ஆண்டவருக்கு 2 ஹார்லி டேவிட்சன் பைக்குகள் பரிசு

By Saravana

ஹார்லி டேவிட்சன் துவங்கி 110 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், வாடிகன் நகரிலுள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆயிரக்கணக்கான ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களும், ரசிகர்களும் குவிந்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தையும், அங்கு திரண்டிருந்தவர்களையும் ஆசிர்வதித்தார்.

அப்போது, இரண்டு ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் பாப் மோட்டார்சைக்கிள்கள் போப் ஆண்டவருக்கு பரிசாக வழங்கப்பட்டன. ஹார்லி டேவிட்சேனின் துணைத் தலைவர் மார்க் ஹான்ஸ் ரிச்சர் இரண்டு பைக்குகளையும் போப் ஆண்டவரிடம் வழங்கினார். இதுதவிர, லெதர் ஜாக்கெட் ஒன்றையும் போப் ஆண்டவருக்கு அவர் வழங்கினார். ஆனால், அதனை அணிய போப் ஆண்டவர் அன்போடு மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஹார்லி டேவிட்சன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் ஏராளமான ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களும், ரசிகர்களும் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல ஓவியர் டேவிட் உல்லின் பெயிண்ட்டிங்குகளும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. அதில், ஒன்று பாதிரியார் ஒருவர் ஹார்லி பைக்கை பார்த்து பிரமித்து நிற்பதும் போலவும் இருக்கிறது.

ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா
ஹார்லி டேவிட்சன் ஆண்டு விழா

More from DriveSpark

Article Published On: Thursday, June 13, 2013, 15:56 [IST]
English summary
Thousands of ‘Bad Boys' & girls riding Harley Davidson motorcycles gathered at St Peter's Square on occasion of the brand's 110th anniversary, where Pope Francis himself blessed the harley Davidson motorcycles and their riders.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+