லம்போர்கினி ஹூரகேன் ஆர்டபுள்யூடி காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!
லம்போர்கினி ஹூரகேன் ஆர்டபுள்யூடி காரை பரிசாக பெற்ற போப் ஃபிரான்சிஸ்..!!
கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவர் ஃபிரான்சிஸிற்கு ரியர் வீல் டிரைவ் கொண்ட லம்போர்கினி ஹூரகேன் கார் பரிசளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மற்றும் தங்க நிறங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லம்போர்கினி ஹூரகேன் கார், போப் ஃபிரான்சிஸ் வசிக்கும் செயின்ட் மார்த்தா இல்லத்தில் முன் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதை காரை வாங்கிக்கொள்ளும் போது, போப் ஃபிரான்சிஸ் காரின் பான்னட்டில் தனது ஆட்டோகிராஃபை எழுதினார்.

லம்போர்கினி கார்களை பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்து வழங்கும் ’ஏடு பிரஸ்னன்’ என்ற துறையால் இந்த பரிசு போப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

போப்பிற்கு வழங்கப்பட்டுள்ள இந்த கார் பியான்கா மோனோசெரஸ் வெள்ளை மற்றும் கியாலா டைபர்னியோ மஞ்சள் நிறம் ஆகியவற்றை கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிகன் நகரத்தின் தேசிய கொடிக்கு மரியாதை வழங்கும் விதமாக அந்த கொடியில் உள்ள நிறங்களை வைத்து போப்பிற்கு பரிசளித்த இந்த காரின் நிறங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

2013ல் போப்பிற்கு ஹார்லி-டேவிட்சன் டைனா சூப்பர் கிளைடு பைக் பரிசாக வழங்கப்பட்டது. ரூ.8.49 லட்சம் மதிப்புடைய அந்த பைக் ஏலத்திற்கு விடப்பட்டு அதன்மூலம் ரூ.2.13 கோடி வருவாய் பெறப்பட்டது.

தற்போது போப்பிற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ள லம்போர்கினி ஹூரேகேன் ஆர்.டபுள்யூ.டி இந்திய மதிப்பில் ரூ.3.45 கோடி விலை பெறுகிறது.

5.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேடட் வி10 எஞ்சினை பெற்றுள்ள இந்த கார் 572 பிஎச்பி பவர் மற்றும் 540 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மிகவும் மிரட்டும் தோற்றம் கொண்ட இந்த கார் ரியர் வீல் டிரைவிங்கில் இயங்கும். மேலும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

போப் ஃபிரான்ஸ்ஸின் கையெழுத்து மற்றும் ஆசீர்வாதத்தை பெற்றுள்ள லம்போர்கினி ஹூரகேன்கார் 12 மே 2018 அன்று ஏலம் விடப்படுகிறது.

பரிசாக வழங்கப்பட்ட இந்த கார் மூலம் கிடைக்கும் ஏலத் தொகையை 4 தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

ஏலத்திற்கு விடப்பட்டாலும் போப் ஃபிரான்சிஸ் லம்போர்கினி ஹூரகேன்காரை ஓட்டுவார் என்று நம்பப்படுகிறது.
போப் இந்த காரை டிரைவ் செய்வதை பார்க்க ஆயிரக்கணக்கானவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








