நேரா ஷோரூமுக்கே வந்து சொகுசு காரை டெலிவிரி எடுத்தது இந்த பிரபலமான பாடகரா!! காரின் விலையை மட்டும் பார்க்காதீங்க

பாலிவுட் பிரபலங்கள் புதியது, புதியதாக சொகுசு கார்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர் என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வகையில், பாலிவுட் பாடகரும் மற்றும் பாடலாசிரியருமான ஜுபீன் கார்க் (Zubeen Garg) புதியதாக விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை வாங்கியுள்ளார். யார் இந்த ஜுபீன் கார்க்? இவர் வாங்கியுள்ள ரேஞ்ச் ரோவர் காரில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? வாருங்கள் இந்த செய்தியில் பார்க்கலாம்.

வடஇந்திய மாநிலங்களில் இருந்து பாலிவுட்டில் நுழைவது எல்லாம் சாதாரண காரியம் அல்ல. ஆனால், இதனை நிஜமாக்கி இருப்பவர் ஜுபீன் கார்க். அசாம் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் அசாம் திரைப்பட துறையில் நிறைய திரைப்படங்களுக்கு பாடல் எழுதி, அதனை பாடியும் அசத்தியுள்ளார். இவ்வளவு ஏன், சில திரைப்படங்களில் ஜுபீன் கார்க் நடித்தும் உள்ளார். மேலும், திரைப்படங்களை இயக்கும் திறனும் இவரிடம் உள்ளது.

singer buys range rover velar

இவை எல்லாவற்றையும் விட, கஞ்சஞ்சங்கா, மிஷன் சைனா போன்ற வெற்றி படங்களின் தயாரிப்பாளரும் இவர் ஆவார். இவ்வளவு திறமைகளை வைத்திருக்கும் ஜுபீன் கார்க்குக்கு பாலிவுட்டில் சமீப காலமாக ரசிகர் பட்டாளம் தொடந்து அதிகரித்து வருகிறது. இதனால், சந்தோஷத்தின் உச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் ஜுபீன் கார்க் புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

ஜுபீன் கார்க் வாங்கியிருப்பது ரேஞ்ச் ரோவரின் வேலர் என்கிற லக்சரி எஸ்யூவி கார் ஆகும். டீலர்ஷிப் ஷோரூமில் ரேஞ்ச் ரோவர் வேலர் காருடன் ஜுபீன் கார்க் நின்றிருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. ஜுபீன் கார்க்கிடம் ஏற்கனவே ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று உள்ளது.

ஆனால், தற்போது வாங்கியிருக்கும் வேலர் கார் ஆனது மிகவும் லக்சரியானது மற்றும் வலிமையான செயல்திறன்மிக்கது ஆகும். லேண்ட் ரோவர் நிறுவனம் உற்பத்தி செய்யும் ரேஞ்ச் ரோவர் கார்களில் ஒரு மாடல் தான் வேலர் ஆகும். இது ஓர் மிட்-சைஸ் எஸ்யூவி கார் ஆகும். இத்தகைய சொகுசு காரை பெட்ரோல் என்ஜின் உடன் ஜுபீன் கார்க் வாங்கியுள்ளார்.

வேலர் பெட்ரோல் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 246 எச்பி மற்றும் 365 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜினின் உதவியுடன் இந்த பெட்ரோல் என்ஜின் வேலர் காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்ல முடியும். ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரில் சொகுசு வசதிகளுக்கு எந்த குறையும் இல்லை.

singer buys range rover velar

ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் உட்பக்கம் பிரீமியம் தரத்திலான மெட்டீரியல்களால் வழங்கப்படுகிறது. பயணிகள் அமர்வதற்கும், பொருட்களை வைப்பதற்கும் நன்கு விசாலமான இடவசதி இந்த ரேஞ்ச் ரோவர் காரில் கிடைக்கிறது. அத்துடன், எலக்ட்ரிக் மூலமாக 14 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கைகள், பனோராமிக் சன்ரூஃப், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின் திரை, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் போன்ற அதிநவீன தொழிற்நுட்ப அம்சங்களும் இந்த காரில் இடம்பெறுகின்றன.

இவற்றுடன், 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, ஹில் ஹோல்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவற்றையும் வேலர் காரில் பெற முடியும். இந்த காரில் ஸ்டேரிங் சக்கரமும், இருக்கைகளும் லெதரால் அலங்கரிப்படுகின்றன. பெட்ரோல் என்ஜின் உடன் ரேஞ்ச் ரோவர் வேலர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.87.90 லட்சமாக உள்ளது.

singer buys range rover velar

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாடகர் ஜுபீன் கார்க் அவரது ரசிகர்கள் மத்தியில் கடின உழைப்பின் அடையாளமாக விளங்குகிறார். சரியாக முயற்சி செய்தால், எங்கிருந்து எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதை ஜுபீன் கார்க் நிரூபித்துள்ளார். தற்போது, ரேஞ்ச் ரோவர் வேலர் போன்ற விலையுயர்ந்த காரை வாங்கியிருப்பது இவரது வளர்ச்சியை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2024, 0:47 [IST]
English summary
Popular bollywood singer takes delivery of range rover velar check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X