வெளிநாட்டில் இந்திய பாடகருக்கு நேர்ந்த கதி!! உதவி கிடைப்பதற்குள் போதும் போதும்னு ஆயிடுச்சு!

சிப்பி கில் (Sippy Gill), பஞ்சாபை சேர்ந்த பாடகரான இவரது ஜீப் வ்ராங்க்லர் ரூபிகான் வாகனம் கனடாவில் நடு ரோட்டில் சென்றுக் கொண்டிருந்த போது ஒருபக்கமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக பாடகர் சிப்பி கில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.

ஆஃப்-ரோடு வாகனமாக இருந்தாலும், சில நேரங்களில் அவையும் விபத்துகளில் சிக்குகின்றன. அந்த வகையில், கனடா நாட்டில் பஞ்சாபி பாடகர் சிப்பி கில்லின் ஜீப் வ்ராங்லர் விபத்தில் சிக்கியுள்ளது. கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா என்கிற பகுதியில் சிப்பி கில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

indian singer met accident

இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பதை வீடியோ உடன் சிப்பி கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிப்பி கில் தனது நண்பர்களுடன் 3-கதவு ஆஃப்-ரோடு வாகனமான வ்ராங்க்லர் ரூபிகானில் சென்றுக் கொண்டிருந்த போது வாகனம் டிரைவரின் கண்ட்ரோலை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது. ஒரு பக்கமாக கவிழ்ந்த வாகனத்தின் உள்ளே சிப்பி கில் நின்றுக் கொண்டிருக்கும் காட்சிகளை வீடியோவில் காண முடிகிறது.

இந்த விபத்தில் பாடகர் சிப்பி கில் உள்பட அவரது நண்பர்களுக்கும் சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், அதனை விட அவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது என்னவென்றால், கவிழ்ந்துக் கிடந்த வாகனத்தை திருப்புவதுதான். ஏனெனில், ஜீப் வ்ராங்க்லர் வாகனங்கள் நன்கு எடை மிக்கவை. அதுமட்டுமின்றி, இந்த விபத்து நடந்தது ஒரு வெட்ட வெளி காட்டு பகுதி என்பதால், உதவிக்கு ஆள் கிடைப்பது சிரமம்.

indian singer met accident

இருப்பினும், நல்ல வேளையாக அந்த வழியாக ஒரு வாகனம் வந்துள்ளது. அதில் வந்தவர்களின் உதவியுடன் வ்ராங்க்லர் ரூபிகான் காரை திருப்பிய பாடகர் சிப்பி கில் மற்றும் அவரது நண்பர்கள் மருத்துவ உதவியையும் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தின்போது, வாகனத்தை சிப்பி கில் ஓட்டியுள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்திற்கு பிறகு ஜாலியாக வீடியோ எடுத்துக் கொண்டாலும், இந்த விபத்து கொஞ்ச நேரத்தில் தனக்கு பயத்தை காட்டிவிட்டதாக சிப்பி கில் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார். டிரைவருக்கு அருகே அமரும் முன் இருக்கை பயணியின் பக்கம் வாகனம் இந்த விபத்தில் பெரிதும் சேதமடைந்திருப்பதை படங்களில் காண முடிகிறது. ஏனெனில், அந்த பக்கத்தில்தான் வாகனம் சாய்ந்துள்ளது.

indian singer met accident

காலியான சாலை என்பதால், வேறு எந்த வாகனமும் அந்த சமயத்தில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. உதவி செய்தவரின் பெயரை அந்த நபர் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதினால் அவரை பற்றிய விபரங்களை வெளியிடவில்லை என்றும் பாடகர் சிப்பி கில் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இந்தியாவில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பலரும் பாடகர் சிப்பி கில்லின் டிரைவிங் திறனை கிண்டல் செய்யும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர். இவ்வாறான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு செல்லும்போது உங்களது வாகனம் 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தை கொண்டதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அதற்காக, 4x4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனத்தில் எப்படி வேண்டுமாயினும் செல்லலாம் என்றில்லை.

indian singer met accident

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விபத்தில் ஜீப் வ்ராங்க்லர் ரூபிகான் வாகனத்தின் மீது குறையை சொல்ல முடியாது. ஏனெனில், உலகளவில் பிரபலமான ஆஃப்-ரோடு வாகனங்களுள் வ்ராங்க்லர் ஒன்றாகும். அதன் ரூபிகான் வெர்சன் அட்வென்ச்சர் பயணங்களுக்கு இன்னும் ஏற்றது. ஆகையால், இந்த விபத்தில் நமக்கு பாடகர் சிப்பி கில்லின் டிரைவிங் திறன் மீதே சந்தேகம் வருகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 27, 2024, 17:11 [IST]
English summary
Popular indian singer met accident in canada check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X