டாடா நெக்ஸான் காரில் அப்படி என்னதாங்க உள்ளது? தொழிலதிபர்கள் கூட ஆசை ஆசையாய் வாங்கி வைத்துள்ளனர்!!
இந்த அளவிற்கு தொழிலதிபர்களாகவும், பலரால் அறியப்பட்ட பிரபலமானவர்களாகவும் இருப்பினும், பட்ஜெட் விலையிலான டாடா நெக்ஸான் (Tata Nexon) காரை வைத்துள்ளீர்களா? என கேட்க தோன்றும் வகையில் சில இந்திய விஐபி-களிடம் டாடா நெக்ஸான் கார் உள்ளது. யார் அந்த விஐபி-கள் என்பதை பற்றியும், அவர்களது டாடா நெக்ஸான் காரை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.
ரத்தன் டாடா: டாடா குழுமத்தின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா இவ்வளவு பெரிய நிறுவனத்தை நிறுவியவராக இருப்பினும் எளிமையான வாழ்க்கையையே விரும்பக்கூடியவர் என்பது நமக்கு தெரியும். இதனாலும், டாடா கார்களின் தரத்தை ஆணித்தனமாக நம்புவதாலும் பல்வேறு டாடா கார்கள் ரத்தன் டாடாவிடம் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் டாடா நெக்ஸான் கார் ஆகும்.

85 வயதான ரத்தன் டாடா அவர்கள் தான் டாடா குழுமம் கார்கள் சந்தையில் நுழைவதற்கு மிக முக்கிய பங்காற்றினார். இந்த வகையில் பார்த்தோமேயானால், நெக்ஸான் போன்ற தரமான டாடா கார்கள் வெளிவருவதற்கு ரத்தன் டாடா முக்கிய காரணமாக விளங்குகிறார். இவரிடம் இருப்பது சற்று பழையதான, ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடிற்கு முந்தைய நெக்ஸான் கார் ஆகும். நீல நிறத்தில் ரத்தன் டாடாவிடம் உள்ள நெக்ஸான் காரில் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உள்ளது.
என் சந்திரசேகரன்: இந்த வரிசையில் நாம் பார்க்க போகும் மற்றொரு டாடா குழும நிர்வாகி என் சந்திரசேகரன் ஆவார். டாடா சன்ஸ் & டாடா மோட்டார்ஸின் தற்போதைய தலைவராக விளங்கும் இவரிடம் டாடா நெக்ஸான் கார் எலக்ட்ரிக் வெர்சனில் உள்ளது. டாடா நெக்ஸான் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் 2017இல் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 2020இல் நெக்ஸானின் எலக்ட்ரிக் வெர்சன் நெக்ஸான் இவி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நெக்ஸான் இவி-ஐ தொடர்ந்து டிகோர் இவி, டியாகோ இவி போன்ற மற்ற எலக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு வந்தன. கடந்த 2022ஆம் ஆண்டில் 50,000ஆவது எலக்ட்ரிக் காரை முழுவதுமாக தயாரித்து, தொழிற்சாலையில் இருந்து டாடா நிறுவனம் வெளியேற்றியது. இந்த நிகழ்வின் போது கலந்துக்கொண்ட என் சந்திரசேகரன் தனது 2வது நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்று கொண்டார். என் சந்திரசேகரன் முதலாவதாக வாங்கியது நெக்ஸான் இவி ஆகும். இரண்டாவதாக பெற்றது நெக்ஸான் இவி பிரைம் ஆகும்.
மந்த்ரா பேடி: 1990ஆம் காலக்கட்டத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நாடு முழுவதும் பிரபலமாகுவதற்கு அடித்தளமாக இருந்தவர்களுள் ஒருவர் மந்த்ரா பேடி ஆவார். 1994இல் இவரது நடிப்பில் துவங்கிய சாந்தி சீரியல் தொடர் பட்டி தொட்டி எங்கும் ஒளிப்பரப்பாகியது. இந்தி மொழியில் வெளியான போதிலும், உங்களில் சிலருக்கும் சாந்தி தொடர் பரீட்சையமானதாக இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்ட சீரியலின் மூலம் பிரபலமாகிய மந்த்ரா பேடி 2020இல் டாடா நெக்ஸான் இவி-ஐ வாங்கினார்.

நெக்ஸான் எலக்ட்ரிக் காரை முதன்முதலாக வாங்கிய பிரபலங்களுள் ஒருவர் மந்த்ரா பேடி எனலாம். மந்த்ரா பேடியிடம் இருப்பது நெக்ஸான் இவி-இன் விலையுயர்ந்த எக்ஸ்.இசட்+ வேரியண்ட் ஆகும். இந்த வேரியண்ட்டின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 312கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இந்த எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக கிடைக்கும் இயக்க ஆற்றல் 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க் திறன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பிரபலங்கள் கூட டாடா கார்களின் மீது எந்த அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை இதன் மூலமாக அறியலாம். ஏனெனில், பல டாடா கார்கள் க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. நெக்ஸான் மாடலும் அவற்றுள் ஒன்று. இதனாலேயே இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய எஸ்யூவி கார்களுள் முதன்மையானதாக நெக்ஸான் உள்ளது.


Click it and Unblock the Notifications
