ஸ்டேரிங்கை பிடிக்க கூட முடியாத அளவிற்கு மது போதை... ரூ.4 கோடி விலைமிக்க போர்ஷே கார் எரிந்து சாம்பல்!!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் மரத்தின் மீது மோதிய சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்போர்ட்ஸ் கார் தீயில் கருகி சாம்பல் ஆகியுள்ளது. எந்த பிராண்டின் ஸ்போர்ட்ஸ் கார் அது? எப்படி இந்த விபத்து நடந்தது? என்பது போன்றதான கேள்விகளுக்கு பதில்களாக, இந்த சம்பவத்தை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம் வாங்க.

ஆக்ரோஷமான பயணம் எப்போதுமே, எந்த நேரத்திலுமே ஆபத்தில் தான் சென்று முடியும் என்பதற்கு உதாரணங்களாக பல்வேறு சம்பவங்களை இதற்கு முன் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஆனால் அவற்றை படித்தாலும் சிலருக்கு அறிவு எட்டுவதில்லையே என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.

porsche 911 car bursts into flames

ஏனெனில், ஆக்ரோஷமான பயணங்களை மேற்கொள்ள கூடாது என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுவரும் அதேவேளையில் சிலர் இவ்வாறான பயணங்களை மேற்கொண்டவாறுதான் உள்ளனர். குறிப்பாக, பணக்காரர்கள் உயிருக்கு உயிரும் பலியாகி, விலை உயர்ந்த வாகனங்களையும் இழக்கின்றனர். அப்படி ஒரு பணக்காரர் தான் குருகிராமில் தனது விலையுயர்ந்த போர்ஷே 911 டர்போ எஸ் காரை தீயில் இரையாக்கி உள்ளார்.

கடந்த மே 11ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்த சம்பவத்தின்போது இந்த போர்ஷே 911 கார் அதிவேகத்தில் சாலைக்கு அருகே இருந்த மரத்தில் மோதியுள்ளது. இந்த மோதலில் உருவான தீ சில மணிநேரங்களில் காரை எரித்து சாம்பலாக்கி உள்ளது. இறுதியாக, காரின் சேசிஸ் உடற்கூடு, சக்கரங்களின் ரிம்கள் உள்பட காரின் பின்பக்கத்தில் சிறிது மிஞ்சியுள்ளது. ஆனால் இவற்றை கடையில் போட்டு பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடலாமே தவிர்த்து, வேறு எதற்கும் உதவாது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சம்பவ நேரத்தில் குருகிராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் இந்த போர்ஷே காரை மிக அதிவேகத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்த அதன் ஓட்டுனர் இயக்கி கொண்டிருந்துள்ளார். அளவுக்கு அதிகமான மது போதை மற்றும் அதிவேகம் இரண்டும் காருக்கு முற்றிலுமாக கண்ட்ரோலை வழங்கவில்லை. காருக்குள் தள்ளாடியபடி இருந்த டிரைவர் ஒரு கட்டத்தில் ஸ்டேரிங் கண்ட்ரோலை முற்றிலுமாக இழந்துள்ளார்.

porsche 911 car bursts into flames

இதனால் தானாக இயங்க ஆரம்பித்த கார், சாலையின் ஓரத்தில் டிவைடரில் மோதி, சாலையில் இருந்து முழுவதுமாக விலகி, அருகில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றுள்ளது. உடனே, இந்த மோதலில் உருவான தீப்பொறிகள் காரை எரிக்க ஆரம்பித்துள்ளன. பின்பு கொளுந்துவிட்டு எரிந்த தீயை கண்டவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல்கள் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக தீ மொத்த காரையும் முடித்துவிட்டது.

சம்பவத்தின்போது காருக்குள் இரு ஆண்கள் இருந்துள்ளனர். காரில் தீ பற்றி கொண்டதை எப்படியோ உணர்ந்த அவர்கள், காரில் இருந்து தப்பித்து சென்றுள்ளனர். காரின் நம்பர் பிளேட்டை வைத்து போலீஸார் ஆராய்ந்ததில், இந்த போர்ஷே 911 டர்போ எஸ் கார் சண்டிகர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குருகிராம் நகர போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: போர்ஷே 911 டர்போ எஸ் காரில் என்னென்ன பாகங்கள் முக்கியமாக வழங்கப்படுகின்றன என்பதை இந்த எரிந்த கார் படத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் அந்த அளவிற்கு, தீயில் எரிந்து என்ஜின் உள்பட காரின் முக்கிய பாகங்கள் குப்பை போல் கிடக்கின்றன. அதிவேக பயணமே தவறு, இதில் இவர்கள் அளவுக்கு அதிகமான மது போதையில் வேறு இருந்துள்ளனர். ஆதலால், இந்த நிகழ்வில் நடந்துள்ள மற்றொரு துக்கமான செய்தி காரில் இருந்த இருவர் தப்பித்து சென்றது ஆகும்.

Article Published On: Friday, May 12, 2023, 14:26 [IST]
English summary
Porsche 911 car bursts into flames
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+