போர்சே காரை அப்பளமாக நொறுக்கிய மெக்கானிக் - கார் உரிமையாளர் கதறல்

பலருக்கு கனவு காராக இருக்கும் போர்சே காருக்கு புதிய வடிவம் கொடுக்க நினைத்து, இறுதியில் அதற்கு இறுதி மரியாதை செய்த கார் உரிமையாளரை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்

By Azhagar

ஸ்போர்ட்ஸ் கார்களிலியே எக்ஸ்க்ளூசிவ் காராக இருப்பது போர்சே கார். மீசோரியில் பல ஆண்டுகாலம் தவமிருந்து வாங்கிய தன் காரின் முகப்பை மாற்ற நினைத்த உரிமையாளர் ஒருவர், அதே பகுதியில் Aaron Holstrom என்பவர் நிர்வகிக்கும் மெக்கானிக் கடைக்கு சீரமைக்க காரை விட்டுசென்றுள்ளார்.

போர்சே காரை அப்பளமாக நொறுக்கிய மெக்கானிக்

அந்த மெக்கானிக் கடை உரிமையாளர் போர்சே கார் கைக்கு வந்தவுடன் ஒரு ஜாலி ரைட் செல்ல முற்பட, அது காருக்கு பெரும் உருவச் சிதைவை அளித்துள்ளது.

போர்சே காரை அப்பளமாக நொறுக்கிய மெக்கானிக்

இதுகுறித்து நமக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி, மெக்கானிக் Aaron Holstrom நண்பர் ஒருவருடன் போர்சேவில் ஜாலி ரைட் சென்றபோது, ட்ராபிக்கை தவிர்க்க முற்பட்டுள்ளார்.

போர்சே காரை அப்பளமாக நொறுக்கிய மெக்கானிக்

அதற்காக அருகிலிருந்த நடைபாதையில் காரை செலுத்தி உள்ளார், இதில் காரில் திடீரென கண்ட்ரோல் இல்லாமல் போக பலரது கனவுக்காரான போர்சே 911 GT3 RS அந்த சமயத்தில்அங்கிருந்த பலரது பார்வைக்கு முன்னால் ஒரு பிளம்பிங் லைன் மீது மோதி, முகப்பு சிதைவிற்குள்ளானது.

போர்சே காரை அப்பளமாக நொறுக்கிய மெக்கானிக்

இதனால் அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் Aaron Holstrom பதறிப்போய் விபத்து குறித்து, காரின் உரிமையாளிரிடம் தெரிவிக்க ஃபோனில் தொடர்ப்புகொண்டபோது, இதைக் கேட்ட அவர்ஃபிராங்க் என்று நினைத்து சத்தம்போட்டு உரிமையாளர் சிரித்துள்ளார். பிறகு நிலைமையை மெக்கானிக் Aaron விளக்கிக் கூற, போர்ச்சே உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார்.

போர்சே காரை அப்பளமாக நொறுக்கிய மெக்கானிக்

பலருக்கு கனவு காராக உள்ள போர்சே 911 GT3 RS மாடல் காருக்கு நிகழ்ந்துள்ள இந்த விபத்தை சரிசெய்ய இதுவரை 1 லட்சத்தி எழுபத்தியைந்தாயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் மேலும் ஒரு சிக்கல் உள்ளது, விபத்திற்குள்ளான ஃபோர்சேவை பிரத்யேகமாக உரிமையாளர் பல விதங்களில் வடிவமைத்துள்ளதால், மேலும் செலவு அதிகரிக்கும் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியொரு ஃபோர்சே வகை காரை சொந்தமாக்கிக் கொள்ள நினைக்கும் பலருக்கும் இந்த விபத்து செய்தி வருத்தத்தை அளித்திருக்கலாம். இருந்தாலும் அடுத்த வெளியாகவுள்ள போர்சே ஃப்12லின் மிரட்டலான புதிய மாடலை பார்க்கவேண்டுமென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை சொடுக்குங்கள்.

Most Read Articles
English summary
A Porsche 911 GT3 RS has been crashed by a performance tuning company owner while he was out on a joyride.
Story first published: Monday, March 6, 2017, 19:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X