கார் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் சிகரெட் பத்த வைக்க முயற்சித்தவருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா? வைரலாகும் வீடியோ

போச்சே 718 கேமேன் காரின் பின்புறம் உள்ள எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து வரும் நெருப்பு மூலம் சிகரெட் பத்த வைக்க முயற்சி செய்த இளைஞர்கள் படுகாயம் ஏற்பட்டுள்ளது தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ காட்சிக்கு பின்னால் உள்ள முழுமையான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பிரபலமாகுவதற்காக சிலர் பல்வேறு விதமான புதிய யுத்திகளை கையாள்வார்கள். இப்படியாக அவர்கள் கோமாளித்தனமாகவோ அல்லது ரிஸ்க் எடுக்கவோ செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். இதனால் அவர்கள் பதிவு செய்த பதிவிற்கு அதிகமான பின்னூட்டங்கள் இருக்கும். இந்த பிரபலத்தை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள் கூட அதிகம் இருக்கிறார்கள்.

porsche cigarette fire

இந்தப் போட்டியில் பலர் சில விபரீதமான செயல்களில் கூட ஈடுபட துணிந்து விடுகிறார்கள். இந்த சம்பவங்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதன் மூலம் தனக்கு பெயரும் புகழும் கிடைக்கும் என்ற ஆசையில் இப்படியான செயல்களை செய்து வருகிறார்கள். இப்படியாகத்தான் சமீபத்தில் ஒருவர் போர்ஷே 718 கேமென் காரின் எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து வெளிவரும் நெருப்பில் சிகரெட் பத்த வைக்க முயற்சி செய்து உள்ளார்.

இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவின்படி மஞ்சள் நிற போர்ஷே 718 கேமென் கார் நின்று கொண்டிருக்கிறது. அதன் பின்பக்கம் உள்ள எக்ஸாஸ்ட் பகுதியில் இவர் கையில் சிகரெட் காத்துக் கொண்டிருக்கிறார். காருக்குள்ளே ஒரு டிரைவர் அமர்ந்து சரியாக காரை ஸ்டார்ட் செய்து பின்னால் நெருப்பு வர வைக்க தயாராக இருக்கிறார்.

porsche cigarette fire

சரியாக காரை ஸ்டார்ட் செய்து ரேஸ் கொடுத்தவுடன் எக்ஸாஸ்ட் பகுதியில் நெருப்பு வரும் என சரியாக காத்திருந்து கையில் சிகரெட்டை பிடித்து எக்ஸாஸ்ட் பகுதியில் வைத்துக் கொண்டிருந்த நபருக்கு பெரும் மகிழ்ச்சி காத்திருந்தது. காரை ஸ்டார்ட் செய்தவுடன் இவர் எதிர்பார்த்ததை விட அதிகமான தீவந்தது. இதனால் அவர் கை சுட்டது, அவர் கையில் நெருப்பு பட்டதும், ஒரு நொடி துள்ளி குதித்து விட்டார். அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆஷாத் கான் என்ற பெயரில் உள்ள புரோபைலில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பலர் இதுகுறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இது ஒரு மோசமான பழக்கம். இது போன்ற வீடியோவை பார்த்து நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் இப்படியான முயற்சியை செய்யாதீர்கள். இது ஆபத்தை ஏற்படுத்தும்.

porsche cigarette fire

போர்ஷே 718 கேமென் காரை பொருத்தவரை மிட்-இன்ஜின் ஃபாஸ்ட் பேக் கூபே காராகும். இந்த கார் 4 விதமான வேரியண்ட் மற்றும் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. அதன்படி இந்த கார் நான்கு விதமான வேரியண்டாகவும் பிரிக்கப்பட்டு விற்பனையாகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 300எச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை 2.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 345 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இறுதியாக 4.0 லிட்டர் 6 சிலிண்டர் நேச்சுரல் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 394 பிஎச்பி பவர் மற்றும் 430 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

போர்ஷே கேமேன் கார் கடந்த 2005ம் ஆண்டு தான் முதல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை பாக்ஸ் ரோடுஸ்டர் காரில் இருந்து இந்த கார் உருவாக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு போர்ஷன் நிறுவனம் இந்த காரில் நேச்சுரல் 6 இன்ஜின் டர்போ சார்ஜர் இன்ஜின் ஆகிய இன்ஜின்களை இந்த காரில் உட்புகுத்தியது அப்பொழுது முதல் இந்த கார் பிரபலமாக மாறி உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக வாகனத்தின் எக்ஸாஸ்ட் பகுதியில் இருந்து இதுபோன்ற நெருப்பு வருவது கிடையாது இப்படியாக நெருப்பு வருகிறது என்றால் இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் அல்லது மாடிஃபிகேஷன் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ இது போன்ற செயல்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள் இது உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2024, 10:47 [IST]
English summary
Porsche cigarette fire man uses exhaust to light cigarette
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X