நெய் விற்பனை செய்கிறதா போர்ஷே நிறுவனம்? வைரல் வீடியோவால் பரபரப்பு!
போர்ஷே நிறுவனம் நெய் தயாரித்து விற்பனை செய்வதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருந்தது. இது பலரை ஆச்சரியப்படுத்தியது. போர்ஷே போன்ற பிரிமியம் பிராண்ட் லைஃப்ஸ்டைல் பொருட்களை விற்பனை செய்வது பலருக்கு தெரியும். ஆனால் உணவு பொருட்கள் விற்பனையை பலரும் ஆச்சரியமாக பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த உண்மையான தகவல்களை காணலாம் வாருங்கள்.
இன்ஸ்டாகிராமில் abhisheikk என்ற பக்கத்தில் சமீபத்தில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் அவர் போர்ஷே சென்டருக்கு சென்றதாகவும் அங்கே போர்ஷே பிராண்டில் நெய் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. உலகளவில் சொகுசு கார்களை விற்பவனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் நெய் தயாரித்து விற்பனை செய்வது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பொதுவாக இப்படியான பிராண்டுகள் தங்கள் பிராண்ட் வேல்யூவை அதிகரிக்க லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளையும் விற்பனை செய்வார்கள். இப்படியாக பேக், பர்ஸ், ஜாக்கெட், வாட்டர் பாட்டில், டீ கப் போன்ற பொருட்கள் போர்ஷே பிராண்டில் விற்பனை செய்யப்படுகிறது. இது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால் நெய் விற்பனை பலரை ஆச்சரிப்படுத்தியுள்ளது.
இது குறித்த உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தோம். இந்த பதிவை வெளியிட்டிருந்த அபிஷேக் என்பவர் இந்த பதிவில் porschecentredubai, porsche.middleeast, @porsche, porsche_club_uae ஆகிய பக்கங்களை டேக் செய்திருந்தார். இதன் மூலம் இது துபாய் போர்ஷே சென்டரில் கிடைக்கிறதா என சோதனை செய்து பார்த்தோம்.

ஆனால் அங்கு இப்படியான எந்த பொருட்களும் விற்பனையில் இருப்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. நாம் முன்னேரே சொன்னது படி அந்நிறுவனம் லைஃப்ஸ்டைல் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது ஆனால் நெய் விற்பனை குறித்த எந்த தகவலையு் தெரிவிக்கவில்லை.
மேலும் இந்த வீடியோவில் அவர் காட்டும் நெய் பாட்டிலில் போர்ஷே நிறுவனத்தின் பிராண்ட் இருக்கிறது. இதனால் ஆச்சரியப்பட்டு பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றரன். ஆனால் இது குறித்து ஆன்லைன் மூலம் தேடிப்பார்த்த போது எந்த விதமான உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. ஆன்லைன் மூலம் போர்ஷே நெய் விற்பனை செய்யப்படவில்லை.
நேரடியாக அனுபவ மையங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதுவரை தகவலகள் பதிவு செய்யப்படவில்லை. இதனால் போர்ஷே நெய் என்பது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்ற குழப்பம் தற்போதும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டவரும் இதை எப்படி எங்கே வாங்குவது என்ற தகவலை வெளியிடவில்லை.
அதே நேரம் அவர் வெளியிட்ட பதிவில் சிலர் செய்த கமெண்ட்கள் ரசிக்கும் விதமாக உள்ளது. ஒருவர் "தற்போது தான் போர்ஷே கார் ஏன் ஸ்மூத்தாக இருப்பது தெரிகிறது" என கமெண்ட் செய்திருந்தார். மற்றொருவர்" லாம்போர்கினி நிறுவனம் தனது பெயரில் Ghee வருவதால் அவர்கள் இதை செய்திருக்கலாம்" என கருத்திட்டுள்ளார். மற்றாெருவர் "9/11 என ரேட்டிங் என பதிவு செய்துள்ளார்" இது போர்ஷே நிறுவனத்தின் 911 காரை குறிக்கிறது. இப்படியாக பல கமெண்ட்கள் ரசிக்க வைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போர்ஷே நிறுவனம் லைஃப் ஸ்டைல் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. நெய் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த வீடியோவின் உண்மை தன்மை சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது. இது குறித்த தெளிவான விளக்கத்தை போர்ஷே நிறுவனம் வெளியிட்டால் மட்டுமே உண்மை தெரியும்.


Click it and Unblock the Notifications








