போர்ஷே காரை குப்பை தொட்டியில் வீசிய இளைஞர்.. அதோட பேருக்குகூட மரியாத இல்ல.. இந்தியால இதோட விலை எவ்ளோ தெரிமா?
கார் காதலர்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாக போர்ஷே (Porsche) உள்ளது. இதுமட்டுல்ல இதன் தயாரிப்பு என்றாலே கண்களை மூடிக் கொண்டு வாங்குபவர்களும் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆனால், நிறுவனத்தின் கார்களின் விலை மிக மிக அதிகம் என்பதால் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான நிறுவனம் தயாரித்த ஓர் விலை உயர்ந்த காரையே இளைஞர் ஒருவர் தற்போது குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கின்றார்.
அதுகுறித்த படங்களே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவைச் சேர்ந்த ஓர் இளைஞரே இந்த விநோத செயலைச் செய்திருக்கின்றார். குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு இருக்கும் அந்த கார் மாடலை சமீபத்தில் தன்னுடைய மனைவிக்கு அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார்.

காதலர் தினத்தை முன்னிட்டே இந்த கார் பரிசளிப்பை அவர் செய்திருக்கின்றார். ஆனால், அந்த பெண் போர்ஷே காரை ஏற்க மறுத்திருக்கின்றார். காரணம் அந்த கார் சிறிய விபத்தின் காரணமாக சேதமுற்ற நிலையில் காட்சி தந்திருக்கின்றார். இதையே அப்பெண்ணின் கணவர் ரிப்பன் கட்டி பரிசாக வழங்கி இருக்கின்றார்.
ஆனால், அந்த பெண்ணோ சேதமடைந்த காரை பரிசாக தந்து தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்து அந்த கார் பரிசை நிராகரித்திருக்கின்றார். இந்த காரணத்தினாலேயே அந்த காரை இளைஞர் தற்போது குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கின்றார். முன்னதாக இந்த காரை அவர் வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினம் அன்றே பரிசாக வழங்க திட்டமிட்டு இருக்கின்றார்.
ஆனால், அவசரம் பொருக்க முடியாமல் அவர் காதலர் தினத்திலேயே தன்னுடைய மனைவிக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக காரை பரிசாக வழங்க முன் வந்திருக்கின்றார். மேலும், அப்போது மனைவியிடம் விரைவிலேயே இதை முழுமையாக சரி செய்து தருவதாகவும் அவர் உறுதி அளித்திருக்கின்றார். ஆனால், இதை ஏற்றுக் கொள்ள மனமில்லால் அந்த காரை அப்படி திருப்பி தந்திருக்கின்றார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண்ணின் கணவர் காரை குப்பைத் தொட்டியில் வீச முடிவெடுத்து, அவ்வாறே செய்திருக்கின்றார். ஏற்கனவே இருவருக்கும் இடையில் சண்டை இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மனைவியை மயக்க இளைஞர் 3 மில்லியன் ரூபில்களைச் செலவிட்டு (இந்திய மதிப்பில் ரூ. 27 லட்சம்) அவர் இந்த காரை வாங்கி இருக்கின்றார்.
ஆனால், அவரின் இந்த திட்டம் வேலைச் செய்யவில்லை. இதன் அதிருப்தியாகவே அந்த கார் தற்போது குப்பைத் தொட்டியில் உள்ளது. இளைஞர் பரிசாக வழங்க முன் வந்த அந்த ஆடம்பர கார் போர்ஷே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான மசான் (Macan) ஆகும்.
இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் இந்த கார் மாடல் ரூ. 96.05 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரை பன்முக எஞ்சின் தேர்வுகளில் உலக சந்தையில் போர்ஷே நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதன் ஆரம்ப நிலை தேர்வே மணிக்கு 232 கிமீட்டர் வேகத்தில் பயணிக்கும். அதேசமயம், பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்ட அதற்கு வெறும் 6.4 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. இத்தகைய அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்ட மற்றும் காஸ்ட்லியான காரே தற்போது குப்பைத் தொட்டியில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல உலக சந்தையிலும் இந்த கார் மாடலுக்கு ரசிகர்கள் உள்ளனர். இதனால்தான் இந்த குப்பைத் தொட்டி சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இருந்தாலும், காரை கொஞ்சம் சரி செய்து பின்னர் ரிப்பன் கட்டி பரிசாக தந்திருக்கலாம் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications








