போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட 9 மெட்ரோ ஸ்டேஷன்கள் நீக்கம்! பணத்தை மிச்சம் பண்ண என்னலாம் பண்ணுறாங்க பாருங்க!
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியில் மறுபரிசீலனைக்கு பிறகு போரூர், மேடவாக்கம் உள்ளிட்ட 9 பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் நீக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தட புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் மெட்ரோ பணிகள் துவங்கப்பட்டு படு ஜரூராக நடந்து வருகிறது. முதல் கட்ட பணிகள் முடிக்கப்பட்டு 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ இயங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2ம் கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ61,843 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட பணிகளை துவங்கும் முன் அதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதன் படி 3 வழிதட்டங்களில் 118.9 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை, 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த திட்டம் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது இதில் உள்ள 9 ரயில்களை நீக்கவும், ரயில் பாதை தூரத்தை 118.1 ஆகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் திட்ட செலவிலிருந்து ரூ1200 கோடியை மிச்சப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் நீக்கப்பட்டதற்கு தொழிநுட்ப சாத்தியங்கள் இல்லாததும், அருகருகே வேறு மெட்ரோ ஸ்டேஷன்கள் இருப்பதும் முக்கியமான காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த 9ரயில் நிலையங்கள் 3 வழிதடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

3ம் வழித்தடத்திலிருந்து தபால் பெட்டி, டவுட்டன் ஜங்ஷன், செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆகிய ஸ்டேஷன்களும், 4வது வழி தடத்தில் பட்டினபாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி காலேஜ் ஆகிய ஸ்டேஷன்களும் நீக்கப்பட்டுள்ளன. 5வது வழி தடத்தில் காளியம்மன் கோவில், போரூர், மேடவாக்கம் ஆகிய ஸ்டேஷன்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேடவாக்கத்தில் நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ செல்லவிருப்பதால் அங்கு ஸ்டேஷன் அமைப்பது சாத்தியமில்லாததாக இருக்கிறது. தபால் பெட்டி, டவுன்டன் ஜங்ஷன், செயிண்ட் ஜோசப் காலேஜ், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி காலேஜ் ஆகிய ஸ்டேஷன் அருகே வேறு மெட்ரோ ஸ்டேஷன்கள் இருப்பதால் இது தேவையில்லை என அகற்றப்பபட்டுள்ளது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பதிலாக முதல் வழி தடத்தில் உள்ள ரயில் நிலையத்தை இணைக்கும்படியான உயர்த்தப்பட்ட ரயில் நிலையம் அமைக்கப்படும். 3 மற்றும் 5வது வழி தடத்திற்கு தொடக்க ரயில் நிலையமாக மாதவரம் பால் பண்ணை ஒரே ரயில் நிலையமாக அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள்.
பொதுவாக மெட்ரோ ரயில் நிலையங்களை வடிவமைக்கும் போது ஒரு கி.மீக்கு ஒரு ரயில் நிலையம் என வடிவமைத்தனர். ஆனால் சென்னையில் நிலம் கையகப்படுத்தும் சிக்கல் காரணமாக சில இடங்களில் மட்டும் 100-200 மீட்டர் அதிகமான தூரத்தில் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக சுரங்கம் அமைப்பதிலும் பணத்தை மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் மெட்ரோ நிர்வாகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது செலவுகளை குறைக்க தற்போது மெட்ரோவை மக்கள் எந்த வகையில் பயன்படுத்துகின்றனர் என்பதை ஆய்வு செய்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இதன் மூலம் மக்களின் கோடிகணக்கான வரிப்பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. அதே நேரம் மக்களுக்கு அதிக சிரமும் கிடையாது.


Click it and Unblock the Notifications









