சந்திரயான்-3 ராக்கெட் ஆஸ்திரேலிய கடலில் விழுந்துவிட்டதா? கரை ஒதுங்கிய உதிரி பாகத்தால் பரபரப்பு!
இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் -3 ராக்கெட்டின் பாகங்கள் தற்போது ஆஸ்திரேலியாவிடம் சிக்கி உள்ளதாக வெளியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் பாகங்கள் எப்படி ஆஸ்திரேலியாவிடம் சிக்கியது? என்ன நடந்தது? விரிவாக காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 14ஆம் தேதி சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அனுப்பியது. இந்த ராக்கெட்டில் இருந்து சந்திரயான் -3 விண்கலம் தனியாகப் பிரிந்து தற்போது நிலவை நோக்கி தனது பயணத்தை துவங்கி உள்ளது.
சந்திரயான்-3 தற்போது பூமியை சுற்றி வருவதாகவும் விரைவில் இது சந்திரனை சுற்றிவிட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 23,-24ஆம் தேதிகளில் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சந்திரயான்-3 சென்ற ராக்கெட்டின் உதிரி பாகங்கள் ஆஸ்திரேலியாவிடம் சிக்கியுள்ளதாக மற்றொரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பகுதியில் கிரீன் ஹெட் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ஜூரியன் பே கடற்கரையில் மர்மமான பொருள் ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்களுக்கு தெரிய வந்தது. இதை பகுதியில் உள்ள மக்கள் எல்லாம் அந்த பொருளை சென்று பார்த்தனர். செய்தி நிறுவனங்களும் அங்கு சென்று இது குறித்து செய்தியை வெளியிட்டனர்.
இதுகுறித்து வெளியான புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இந்த பொருளை பார்க்கும்போது ஏதாவது ராக்கெட் உதிரிபாகமாக இருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது இதை பார்க்கும் பொழுது பெரிதாகவும் ராக்கெட்டுக்கு பயன்படுத்தப்படும் இன்ஜினின் பாகமாகவும் தான் தெரிகிறது. எந்த நாட்டில் தயாரித்த ராக்கெட் இன்ஜின் பாகம் என்பது தெரியவில்லை.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியான பின்பு நெட்டிசன்கள் இது குறித்து இன்டர்நெட்டிலேயே ஆய்வு நடத்தினார் அப்பொழுது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிஎஸ்எல்வி ராக்கெட்டின் 3-4 கட்ட இன்ஜினை சேர்க்கும்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் உள்ள பாகமும் இந்த பாகமும் ஒன்றாக இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
இதையடுத்து பலர் இந்தியா சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட்டின் உதிரிபாகம் தான் இது என்று சமூக வலைதளங்களில் பேச துவங்கி விட்டனர். இதை எடுத்து இந்தியா அனுப்பிய சந்திராயன் 3 ராக்கெட்டின் உதிரி பாகங்கள் ஆஸ்திரேலியாவிடம் சிக்கி உள்ளதாக பலர் பேசி வருகின்றனர்.
புகைப்படத்தில் பார்ப்பது போல் ஆஸ்திரேலியாவில் சிக்கிய பாகம் கிட்டத்தட்ட இந்தியா அனுப்பிய பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரிபாகம் போல தான் இருக்கிறது. ஆனால் இது சந்திரயான்-3 ராக்கெட்டின் உதிரிபாகமாக இருக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் சந்திரயான்-3 விண்கலம் எல்விஎம் மார்க் ராக்கெட்டில் தான் விண்ணில் செலுத்தப்பட்டது. இதுவும் பிஎஸ்எல்வி ராக்கெட்டும் வேறு வேறு ஆகும்.
இந்தியாவிடம் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தான் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் டெலியோஎஸ்-2 என்ற சேட்டிலைட்டை பூமியின் நீல்வெட்ட பாதையில் நிலை நிறுத்துவதற்காக விண்ணில் அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட்டின் உதிரி பாகமாக வேண்டுமானால் இருக்கலாம் என பேசப்பட்டு வருகுிறது.
பலர் இந்த ராக்கெட்டின் மூன்றாம் கட்ட இன்ஜினில் பாகம் என குறிப்பிடுகின்றனர். பிஎஸ்எல்வி ராக்கெட் அசெம்பிள் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கிடைக்கிறது. அந்த புகைப்படத்தையும் தற்போது ஆஸ்திரேலியாவில் ஒதுங்கிய மர்மமான பாகத்தின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பல கமெண்ட் செய்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய மர்மமான ராக்கெட் பாகம் இந்தியாவிற்கு உரியதாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இந்தப் பொருள்கள் கரை ஒதுங்குவதால் எந்த விதமான பாதிப்பும் கிடையாது. இதை எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியா அரசாலும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு குறித்த தகவல்களை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது.


Click it and Unblock the Notifications








