ஓய்வு பெற்ற பிறகுதான் எல்லாம் கை கூடுது! 10 லட்ச ரூபாய் காருடன் நிற்கும் இவரை மொத்த இந்தியாவுக்கும் தெரியும்

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து அறிமுகம் செய்யப்பட்டு மொத்த இந்திய கார்கள் மார்க்கெட்டையே புரட்டிப் போட்ட எலக்ட்ரிக் கார், விண்ட்சர் இவி (Windsor EV) எனலாம். ஏனெனில், அந்த அளவிற்கு விலை குறைவான எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இத்தகைய காரை முன்னாள் இந்திய ஹாக்கி (Hockey) வீரர் தற்போது வாங்கியுள்ளார். யார் அந்த ஹாக்கி வீரர் என்பதையும், அவர் வாங்கியுள்ள எம்ஜி எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

பிரிட்டிஷ் கார் நிறுவனமான எம்ஜி மோட்டார் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து கார்களை விற்பனை செய்து வருகிறது. இருப்பினும், எம்ஜி நிறுவனத்தின் உண்மையான ஆட்டம் ஜே.எஸ்.டபிள்யூ (JSW) நிறுவனத்துடன் இணைந்த பிறகே துவங்கியது என சொல்ல வேண்டும். ஏனெனில், அதன்பின்பே கோமெட் இவி என்கிற இந்தியாவிலேயே விலை குறைவான எலக்ட்ரிக் காரை எம்ஜி அறிமுகம் செய்தது.

pr sreejesh buys mg windsor

ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் ஹாக்கி வீரர் வாங்கியிருப்பது எம்ஜி விண்ட்சர் இவி என்கிற மற்றொரு எலக்ட்ரிக் கார் ஆகும். கோமெட் இவி காரை காட்டிலும் மக்கள் மத்தியில் வேகமாக பிரபலமாகிவரும் எலக்ட்ரிக் காராக விண்ட்சர் இவி-ஐ சொல்லலாம். இத்தனைக்கும் கோமெட் இவி-ஐ காட்டிலும் விண்ட்சர் இவி-இன் விலை சற்று அதிகமாகும்.

அதற்காக விலை மிகவும் அதிகமான எலக்ட்ரிக் கார் என நினைத்துவிட வேண்டாம். எம்ஜி விண்ட்சர் இவி தோற்றத்தில் போதுமான அளவிற்கு பெரிய எலக்ட்ரிக் கார் ஆகும். அப்படியிருந்தும் இந்த காரை ரூ.10 லட்சத்தில் இருந்து எம்ஜி விற்பனை செய்து வருகிறது. இவ்வளவு குறைவான இந்த பிரம்மாண்ட எலக்ட்ரிக் காரை எம்ஜி நிறுவனத்தால் எவ்வாறு விற்பனை செய்ய முடிகிறது என்றால், பேட்டரியை குத்தகை முறையில் வழங்குவதினால் ஆகும்.

pr sreejesh buys mg windsor

அதாவது, காரை வாங்கிய பின்பு சார்ஜை பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணத்தை செலுத்தி வேறோரு சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை இந்திய மக்கள் நிறைய பேருக்கு பிடித்துள்ளதன் காரணமாகவே, விண்ட்சர் இவி காரின் விற்பனை டாப் கியரில் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், தற்போது விண்ட்சர் இவி காரை வாங்கியிருக்கும் ஹாக்கி வீரர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (PR Sreejesh) ஆவார்.

கேரளாவை சேர்ந்த பி.ஆர் ஸ்ரீஜேஷ் கடந்த 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கையோடு தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இந்த நிலையில், 36 வயதான பிஆர் ஸ்ரீஜேஷ் புதியதாக விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை கேரளாவில் எம்ஜி ஷோரூம் ஒன்றில் டெலிவிரி பெறும் வீடியோவை அந்த ஷோரூமே அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

pr sreejesh buys mg windsor

ஸ்ரீஜேஷின் வருகைக்காக மொத்த ஷோரூமையே அலங்கரித்து இருப்பதை வீடியோவில் காணலாம். விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை வழக்கமான மற்ற எலக்ட்ரிக் கார்களை போன்று பேட்டரி உடனும் வாங்கலாம். எக்ஸ்சைட், எக்ஸ்க்ளூசிவ், எஸ்ஸென்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் எம்ஜி விண்ட்சர் இவி விற்பனை செய்யப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஆர் ஸ்ரீஜேஷ் போன்ற பிரபலங்கள் வாங்குவதன் மூலமாக எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு மேலும் விளம்பரம் கூடி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதை பார்த்து அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த எலக்ட்ரிக் காரை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 19:54 [IST]
English summary
Pr sreejesh buys mg windsor ev electric car in kerala
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X