பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

சாஹோ திரைப்படத்தின் டீசரில் பிரபாஸ் ஓட்டி வரும் பைக், ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

நேர் கொண்ட பார்வை படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டீர்களா? நீங்கள் அஜீத் ரசிகராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட நிச்சயம் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் என சமூக வலை தளங்கள் முழுக்க அதுதான் பேச்சாக உள்ளது.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் மற்றொரு படத்தின் டீசரும் கூட தற்போது வெளியாகியுள்ளது. பிரபாஸ், ஷர்த்தா கபூர், அருண் விஜய் மற்றும் ஜாக்கி ஷெரூப் என நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படத்தின் டீசர்தான் அது.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

பாகுபலி இரண்டு பாகங்களுக்கு பிறகு பிரபாஸின் மார்க்கெட் எகிறியிருக்கும் சூழலில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் சாஹோ படம் வெளியாகவுள்ளது. அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஸன் த்ரில்லர் படமாக சாஹோ உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

சாஹோ படத்தின் டீசர் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உள்ளது என சினிமா ரசிகர்கள் பாராட்டி வரும் சூழலில், ஆட்டோமொபைல் ஆர்வலர்களையும் கூட இது ஈர்த்துள்ளது. இதில், டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மோட்டார்சைக்கிளை பிரபாஸ் ஓட்டி வருவதே இதற்கு காரணம்.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

சாஹோ படக்குழுவினர் சரியான ஒரு பைக்கைதான் தேர்வு செய்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்பனையில் உள்ள மிகச்சிறந்த ஸ்ட்ரீட்-நேக்கட் மோட்டார்சைக்கிள்களில், டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலும் ஒன்று.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல் ஏன் ஸ்பெஷல்? என்பதற்கான காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இலகுவான மோட்டார்சைக்கிள் மாடலில் சக்தி வாய்ந்த இன்ஜினை டிரையம்ப் நிறுவனம் வழங்கியிருப்பதும் ஒரு காரணம் என சொல்லலாம்.

MOST READ: சொந்த காரையே திருடிய தொழிலதிபர்... பலே நாடகத்தை கச்சிதமாக கண்டுபிடித்த போலீசாரின் சாமர்த்தியம்...

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

இதன் மூலம் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடல் ரைடருக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது. அத்துடன் அதன் செக்மெண்ட்டில் மிகச்சிறந்த பெர்ஃபார்மென்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலாகவும் உருவெடுத்துள்ளது.

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

ஸ்ட்ரீட் ட்ரிபிள் எஸ் மாடலில் வழங்கப்பட்டுள்ள அதே 765 சிசி இன்-லைன் மூன்று-சிலிண்டர் இன்ஜின்தான் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேரியண்ட்டில் கூடுதல் பவர் அவுட்புட் கிடைக்கும் வகையில் இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

MOST READ: யாரென்றே தெரியாத பெண்ணுடன் நடுரோட்டில் அட்டகாசம் செய்த வாலிபரின் வீடியோ வைரல்... அதிர்ச்சி பின்னணி

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

அதாவது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 123 பிஎஸ் பவர் மற்றும் 77 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. அத்துடன் 5 இன்ச் முழு-கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரும் வழங்கப்படுகிறது.

MOST READ: ஹோட்டல், மால்களில் டூவீலர்களை பார்க்கிங் செய்ய அதிரடி தடை? அதிகாரிகளின் யோசனைக்கு காரணம் இதுதான்

பிரபாஸின் சாஹோ டீசரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? இந்திய சினிமாவின் டிரெண்ட் மாறுகிறது...

பாதுகாப்பு என எடுத்து கொண்டால், டிராக்ஸன் கண்ட்ரோல், ஏபிஎஸ், ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ் மாடலில் ஐந்து ரைடிங் மோடுகள் வழங்கப்படுகின்றன. சாஹோ படத்தின் டீசரை நீங்கள் கீழே காணலாம்.

ஹை-எண்ட் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய திரைப்படங்களில் பயன்படுத்தும் டிரெண்ட் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இது ஆட்டோமொபைல் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் ஒரு விஷயம்தான்.

Source: UV Creations

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Prabhas Rides Triumph Street Triple RS In Saaho Action Movie. Read in Tamil
Story first published: Thursday, June 13, 2019, 19:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X