டியூட் படம் செம வசூல் போல! இணை இயக்குநருக்கு இப்படி ஒரு கார் பரிசு!
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சமீபத்தின் தனது அசோசியேட் இயக்குநர் ஒருவருக்கு கார் வாங்கி பரிசளித்துள்ளார். ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரை வாங்கி இவர் பரிசளித்துள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழ் சினிமாவில் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதன் பின் லவ் டுடே, டிராகன், சமீபத்தில் டியூட் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் பிரதீப் ரங்க நாதன். இவர் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஸன் என்றே சொல்ல வேண்டும். வரிசையாக தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து வெளியான டியூட் திரைப்படம் மிகப்பெரிய அளவில் மார்கெட்டில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படமான கோமாளி படத்திலிருந்து தன்னிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் என்பது தற்போது கார் ஒன்றை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். ரெனால் நிறுவனத்தின் க்விட் காரை தான் இவர் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் காரை வாங்கி பரிசளித்தார். பின்னர் இருவரும் இந்த தருணத்தை கேக் வெட்டி கொண்டனர். அஐத்து இவரும் காரில் ஏறி ஒரு ரவுண்ட் வலம் வந்தனர்.
இந்த ரெனால்ட் க்விட் காரை பொருத்தவரை மார்கெட்டில் ரூ4.30 லட்சம் முதல் ரூ5.99 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 15 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 பிஎச்பி பவரையும், 91 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

இந்த காரின் இன்ஜினில் லோ எண்ட் டார்க் வசதி இருக்கிறது. இதனால் சிக்னல்களில் நின்று நின்று பயணிக்க ஏற்ற காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறைந்த எடை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டிலேயே இந்த கார் சிறப்பான இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் கொண்ட காராக இருகு்கிறது.
இந்த காரில் மேனுவல் கியர் பாக்ஸில் வேகமாக கியரை மாற்ற முடியும். ஏஎம்டி வாங்கினால் டிராஃபிக்கில் நிதானமாக பயணிக்க ஏற்றதாக இருக்கிறது. இந்த காரில் அதிகபட்சம் 184 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறது. இதனால் வேகமாக ஆக்ஸிலரேட் செய்யவும், கேபின் பகுதியில் சத்தம் குறைவாக இருக்கும் வயில் வடிவமைக்கப்பட்டுள்ளுது.இந்த கார் லிட்டருக்கு 21.7 முதல் 22 கி.மீ வரை மேலேஜ் கிடைக்கும் வகையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் குறித்து வெளியில் அவ்வளவாக சொல்ல மாட்டார்க்ள். பிரதீப் ரங்கநாதன் தனது இணைஇயக்குநருக்கு கார் வாங்கி பரிசளித்தது நிச்சயம் பரிசளித்தது நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









