விக்ரம் லேண்டர்ல இந்த விஷயத்தை கவனீச்சீங்களா? ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் வெளியான உண்மை தகவல்!

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்கான் ரோவர் லேண்டரை புகைப்படம் எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளது. இஸ்ரோ இந்த புகைப்படத்தை தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இந்த புகைப்படம் மூலம் விக்ரம் லேண்டர் எவ்வளவு துல்லியமாக நிலவில் லேண்ட் ஆகி உள்ளது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோவின் சந்திராயன் 3 வெற்றிகரமான பாதையில் பயணித்து வருகிறது. இதன்படி கடந்த 23ஆம் தேதி விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே அதிலிருந்து ரோவர் வெளியேறி பல்வேறு இடங்களுக்கு பயணித்து ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கிவிட்டது. இந்த தகவல்களை எல்லாம் ரோவர் லேண்டர் மூலமாக இஸ்ரோவிற்கு அனுப்பி வருகிறது.

chandrayaan 3

விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பின்பு ரோவர் வெளியேறிய புகைப்படம் முதல் தற்போது ரோவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியதையும் ரோவர் செய்த ஆய்வுகள் குறித்து தகவல்களையும் இஸ்ரோ அவ்வப்போது தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளால் ரோவர் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நிலவில் பயணித்து வரும் ரோவர் நிலவில் உள்ள தன்மைகளை பார்த்து அதற்கு ஏற்றார் போல் தன் திசையை மாற்றி பயணம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு பெரும்பள்ளம் இருப்பதை பார்த்து முன்னரே அதை கணித்து தனது திசையை மாற்றி எந்தவித சேதாரமும் இல்லாமல் பயணித்து வருகிறது.

ரோவர் நிலவில் ஆங்காங்கே இந்திய விஞ்ஞானிகள் செய்த திட்டத்தின் படி தனது பயணத்தை மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவரில் நேவிகேஷன் கேமரா என்ற ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும். இந்த கருவி ரோவருக்கு முன்பக்கமும் பின்பக்கமும் உள்ள விஷயங்களை புகைப்படம் எடுத்து அதை கணிப்பதற்காக பூமிக்கு அனுப்பி வைக்கும்.

இந்த கேமரா மூலம் தான் கடந்த சில இடங்களுக்கு முன்பு பெரும் பள்ளத்தை கண்டறிந்து தனது திசையை மாற்றி ரோவர் பயணித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு புகைப்படத்தை ரோவர் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அதில் ரோவர் விக்ரம் லாண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. அதாவது தான் இறங்கி வந்த இடத்தையே ரோவர் தற்போது முழுமையாக புகைப்படம் எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியுள்ளது.

இந்த புகைப்படத்தை தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படத்தின்படி லேண்டர் எவ்வளவு துல்லியமாகவும், பத்திரமாகவும் தரையிறங்கியுள்ளது என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்ய முடிகிறது. இது மட்டுமல்ல லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளும் துல்லியமாக தனது பணியை செய்து வருவதை இஸ்ரோ இதன் மூலம் உறுதி செய்துள்ளது.

இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பிய இந்த லேண்டரில் ரோவர் மட்டும் நிலவில் தரையிறங்கி தனது ஆய்வுகளை செய்யும் என பல நினைக்கிறார்கள். ஆனால் அது மட்டுமல்ல லேண்டரிலும் சில கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதுவும் லேண்டர் தரை இறங்கிய இடத்திலேயே தனது ஆய்வு பணியை செய்து அந்த தகவல்களையும் இஸ்ரோவிற்கு அனுப்பி வைக்கிறது. இப்படியாக அந்த கருவிகள் தன் பணியை செய்வதும் இந்த புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

பிரக்யான் ரோவரின் வாழ்நாள் மொத்தமே 14 நாட்கள் தான். இதில் அதன் 7நாட்கள் கடந்து விட்டது. அடுத்த ஏழு நாட்கள் மட்டுமே பிரக்யான் ரோவர் நிலவின் பல்வேறு பகுதிகளில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். பின்னர் இது செயல் இழந்து விடும். ரோவரால் அந்தப் பகுதியில் இருள் சூழ்ந்த பிறகு செயல்பட முடியாது. அடுத்த 14நாட்களுக்கு இஸ்ரோ இந்த விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கும்.

அதற்குள் இஸ்ரோ விஞ்ஞானிகள் முக்கியமான தகவல்களை எல்லாம் சேகரித்து விடுவார்கள். அதன் பின்பும் அடுத்த 14நாட்களுக்கு லேண்டர் இருக்கும் இடத்தில் இருள் சூழ்ந்திருக்கும் அதன்பின்பு வெயில் வரும் போது மீண்டும் இந்த ரோவர் மற்றும் லேண்டர் ஆக்டிவேட் ஆகும்படி தான் டிசைன் செய்து இருக்கிறார்கள். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. இருள் சூழ்ந்த நேரத்தில் அங்கு சூழ்நிலை எப்படியாக இருக்கிறது என்பதை பொறுத்துதான் இது சாத்தியப்படும்

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ அனுப்பிய இந்த சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் ஆய்வுகளை செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பி வரும் நிலையில் பல முக்கியமான தகவல்கள் இஸ்ரோவிற்கு கிடைத்துவிட்டது. மேலும் இஸ்ரோ தொடர்ந்து இந்த ஆய்வு பணியை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது இருள் நேரத்தில் அங்கு நடக்கும் விஷயத்தை ஆய்வு செய்வதற்காகவே அடுத்த சந்திராயன் திட்டத்தை இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

Article Published On: Wednesday, August 30, 2023, 19:46 [IST]
English summary
Pragyan rover records first image of vikram lander on the moon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+