வேலைக்கே போக வேணாம்! இந்த ஆப் இருந்தா மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்! இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க!
உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents) அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்திய சாலைகளில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) பின்பற்ற தவறுவது மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகளிடம் ஒரு பழக்கம் உள்ளது. காவல் துறையினரை பார்த்தால் மட்டும் அவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவார்கள்.

வாகன துறையினர் இல்லாவிட்டால், போக்குவரத்து விதிமுறைகளை எல்லாம் அவர்கள் ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக அதிரடியான புதிய திட்டம் ஒன்றை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store), டிராஃபிக் ப்ராஹரி (Traffic Prahari) என்ற செயலி (App) உள்ளது. இது டெல்லி போக்குவரத்து காவல் துறையால் (Delhi Traffic Police) அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு செயலி ஆகும்.

சாலையில் வாகன ஓட்டிகள் யாராவது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை பார்த்தால், அதை பொதுமக்கள் இந்த செயலி மூலமாக, டெல்லி போக்குவரத்து காவல் துறைக்கு தெரியப்படுத்தலாம். அதாவது ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார் என்றால், அதனை தெளிவாக புகைப்படம் எடுத்து, இந்த செயலியில் பதிவேற்றலாம்.
அத்துடன் சம்பவம் நடைபெற்ற நாள், நேரம் மற்றும் இடம் ஆகிய தகவல்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். நீங்கள் புகார் அளித்த பிறகு, அதன் உண்மைதன்மையை காவல் துறை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். அளிக்கப்பட்ட புகாரில் உண்மை உள்ளது என்பது தெரிய வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு, அபராத ரசீது அனுப்பி வைக்கப்படும்.
இந்த செயலியின் மற்றொரு முக்கியமான விசேஷம் என்னவென்றால், உண்மையான புகார்களை அதிக அளவில் வழங்கியவர்களின் பட்டியலை, ஒவ்வொரு மாதமும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தயார் செய்கின்றனர் என்பதுதான். இதில், முதல் இடம் பிடிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசாக கிடைக்கும்.
இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது இடம் பிடிப்பவருக்கு 20 ஆயிரம் ரூபாயும், நான்காம் இடம் பிடிப்பவருக்கு 15 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும். டெல்லி போக்குவரத்து காவல் துறையின் இந்த முயற்சிக்கு, டெல்லி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 50 ஆயிரம் ரூபாய் என்பது நல்ல தொகைதான். எனவே நிறைய பேர் பார்ட்-டைமில் இதையே வேளையாக செய்ய தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எது எப்படியோ, சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இதன் மூலம் குறைந்தால், அது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயமே.


Click it and Unblock the Notifications








