3.30 கோடி ரூபாய் காரை வாங்கியது இவ்ளோ பெரிய ஆளா! லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் கொடுக்கும் உல்லாச கப்பல்!

இந்தியாவை பொறுத்தவரை அரசியல்வாதிகள் (Politicians) பெரும்பாலும் எளிமையான வாழ்க்கையைதான் வாழ்வார்கள். ஆனால் அந்த காலம் எல்லாம் தற்போது மலையேறி விட்டது. ஆம், நிறைய அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ தொடங்கி விட்டனர். அப்படி ஆடம்பரமான வாழ்க்கையை வாழும் அரசியல்வாதிகளில் ஒருவர்தான் ப்ரமோத் மாதவராஜ் (Pramod Madhwaraj).

அரசியல்வாதி என்பதை கடந்து, தொழில் அதிபர் (Businessman) என்ற முகமும், ப்ரமோத் மாதவராஜிற்கு உண்டு. இதுவே அவரது ஆடம்பர வாழ்க்கைக்கான முக்கிய காரணம். இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் (BMW XM) ஆகும். இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்தது.

Pramod Madhwaraj Buys BMW XM

இந்த காரின் விலை (Price) 3.30 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎம்டபிள்யூ ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ப்ரமோத் மாதவராஜின் வீட்டிலேயே, இந்த புதிய காரை டெலிவரி செய்துள்ளனர். பிரபலங்கள் பலரும் தற்போதெல்லாம் இப்படி வீட்டிலேயேதான் டெலிவரி பெற்று கொள்கின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் காரில், 4.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 653 பிஎஸ் பவர் மற்றும் 800 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

BMW XM

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் என்ற வேகத்தை வெறும் 4.3 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. இது ப்ளக்-இன் ஹைப்ரிட் வாகனம் (Plug-in Hybrid Vehicle) என்பதால், ஒரு லிட்டருக்கு சுமார் 62 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியண்ட் லைட்டிங், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் அடாஸ் (Advanced Driver Assistance Systems - ADAS) என பல்வேறு அதிநவீன வசதிகளும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.

எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு ஆகும். ஆனால் ப்ரமோத் மாதவராஜ் மிகவும் விலை உயர்ந்த ஒரு காரை வாங்குவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls Royce Ghost) உள்பட பல்வேறு விலை உயர்ந்த கார்களை ப்ரமோத் மாதவராஜ் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்எம் சொகுசு எஸ்யூவி காரானது, ப்ரமோத் மாதவராஜிற்கு சௌகரியமான மற்றும் சொகுசான பயணத்தை வழங்கும் என்பது உறுதி. வரும் காலங்களில் அவர் இன்னும் நிறைய கார்களை வாங்குவதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 23, 2023, 17:50 [IST]
English summary
Pramod madhwaraj buys bmw xm luxury suv worth rs 3 30 crore all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+