அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ள காண்ட்ராக்டர் நேசமணி விவகாரம் புதிய அவதாரம் எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்று (மே 30) தொடர்ந்து 2வது முறையாக பதவியேற்று கொண்டார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை பின்னுக்கு தள்ளி விட்டு, மிக வேகமாக ட்ரெண்ட் ஆனார் காண்ட்ராக்டர் நேசமணி.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

இந்திய அளவில் மட்டுமல்ல. உலக அளவிலும் காண்ட்ராக்டர் நேசமணிதான் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் விறுவிறுவென முன்னேறினார். ஒட்டுமொத்த தமிழர்களும் இணைந்து காண்ட்ராக்டர் நேசமணியை சர்வதேச அளவில் ட்ரெண்ட் செய்தனர்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

நேற்று முன் தினம் மதியம் (மே 29) யதேச்சையாக #Pray_for_Neasamani ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக தொடங்கியது. அதன்பின் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் அது தொடர்பான மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்க தொடங்கின.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

விஜய், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த ப்ரெண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் கதாபாத்திர பெயர்தான் நேசமணி. ஒரு காட்சியில் ரமேஷ் கண்ணா (பாத்திர பெயர் கிருஷ்ணமூர்த்தி) கையில் இருந்து சுத்தியல் தவறி விழுந்து காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் தாக்கும்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

இதனை அடிப்படையாக வைத்துதான் நேசமணி நலம் பெற வேண்டும் என வேடிக்கையாக மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. இதன் உச்சகட்டமாக சவுக்கிதார் பாணியில் சிலர் தங்கள் பெயருக்கு முன்னால் காண்ட்ராக்டர் என்ற வார்த்தையை இணைத்து கொண்டனர்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

இந்த சூழலில் உலக அளவில் டிரெண்ட் ஆன நேசமணி விவகாரத்தை, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக காவல் துறை பயன்படுத்தி கொண்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதே இதற்கு முக்கியமான காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

இருந்தபோதும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் தமிழ்நாடு காவல் துறையின் பேஸ்புக் பக்கத்தில், நேசமணி விவகாரத்தையும், ஹெல்மெட் விழிப்புணர்வையும் இணைத்து ஒரு பதிவு இடப்பட்டுள்ளது.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியல் தாக்கும் காட்சியை பகிர்ந்துள்ள தமிழ்நாடு காவல் துறையினர், காயங்களை தவிர்க்க ஹெல்மெட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

நகைச்சுவையாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தை வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சமயோசிதமாக பயன்படுத்தி கொண்ட தமிழக காவல் துறையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதுதவிர குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர போலீசாரும் இதனை விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

அகமதாபாத் போலீசாரின் டிவிட்டர் பக்கத்தில், ''பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருந்தால், நேசமணிக்கு இந்த விபரீதம் நிகழ்ந்திருக்காது. எனவே வீட்டிற்கு உள்ளே ஆகட்டும் அல்லது சாலையாகட்டும் தேவைப்படும் நேரங்களில் பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள்'' என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டுமான பணிகளில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தும் ஹெல்மெட்டுடன் வடிவேலு இருப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த பதிவு இடப்பட்டுள்ளது.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

சாலை விபத்துக்களால் அதிகம் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். சாலை விபத்தில் ஒரு கார் டிரைவரை காட்டிலும், டூவீலர்களில் பயணம் செய்பவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 33 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

ஏனெனில் விபத்துக்களை தவிர்க்கவும், ஒரு வேளை விபத்து நிகழ்ந்தால் உள்ளே இருப்பவர்களை காக்கவும் கார்களில் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. கார் விபத்தில் சிக்கினால், ஏர் பேக், சீட் பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் பயணிகளை காப்பாற்றும்.

அத்தனை தவறும் நேசமணி மீதுதான்... குஜராத்தின் குற்றச்சாட்டால் அதிர்ச்சியில் உறைந்த தமிழக நெட்டிசன்கள்

ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இவ்வாறான வசதிகள் எதுவும் இல்லை. எனவே அவர்கள் ஹெல்மெட் அணிவதுதான் நல்லது. இரு சக்கர வாகன விபத்துக்களில், உயிரிழப்பு நிகழ தலையில் ஏற்படும் காயம்தான் மிக மிக முக்கியமான காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu, Ahmedabad Police Use Pray for Nesamani Hashtag For Helmet Awareness In Social Media. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X