வர வர இவங்க அக்கப்போர் தாங்க முடியல... போட்டோஷீட் நடத்துவதற்கு வேற இடமே கிடைக்கலயா? வைரலாகும் வீடியோ!!
திருமணத்திற்கு எவ்வாறு ஆயிரம் திட்டங்களை போடுகிறோமோ அதேபோன்று திருமணத்திற்கு முந்தைய போட்டோஷீட்டிலும் இன்றைய இளம் தலைமுறையினர் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக, வித்தியாச, வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட திருமண போட்டோஷீட்களை அவ்வப்போது பார்க்க முடிகிறது. இதில் சில போட்டோஷீட் சம்பவங்கள் விபரீதத்தில் முடிந்துள்ளதையும் பார்த்திருக்கிறோம். ஏனெனில் இந்த விஷயத்தில் சிலர் தங்களது லிமிட்டை தாண்டுகின்றனர். அந்த வகையில் இங்கு ஒரு திருமண கோஷ்டி பிசியான சாலையில் தங்களது ப்ரீ-வெட்டிங் போட்டோஷீட்டிங்கை மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
திருமணத்திற்கு முன் மணப்பெண்ணும், மணமகனும் இணைந்து எடுத்துக் கொள்வதே ப்ரீ-வெட்டிங் போட்டோஷீட். இவ்வாறான போட்டோஷீட்கள் ஆரம்பத்தில் போட்டோ கடைகளுக்கு உள்ளேயும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளிலும் நடத்தப்பட்டன. அதன்பின், வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டம் அல்லது குளம்/ ஆற்றிற்கு அருகே மணமக்களை நிற்க வைத்தோ அல்லது படுக்க வைத்தோ போட்டோஷீட் நடத்தப்பட்டது.

ஆனால், தற்போது சுடுகாட்டில் போட்டோஷீட் நடத்தும் அளவிற்கு மற்றவர்களிடம் இருந்து ஸ்பெஷலானதாக தெரிய வேண்டும் என்பதற்காக புது, புது இடங்களை தேடி போட்டோகிராபர்களை திருமணத்தார்கள் அழைத்து செல்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஆகும். ஏனெனில், எடுக்கப்படும் ப்ரீ-வெட்டிங் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு காட்டுவதற்கு முன்னரே இன்றைய கால இளைஞர்கள் அதனை தங்களது ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு ப்ரீ-வெட்டிங் போட்டோஷீட்களுக்காக புது, புது இடங்களை தேடி செல்லும் நிலையில், இங்கு ஒரு திருமண கோஷ்டி அவர்களது போட்டோஷீட்டிங்கை பிசியான சாலையின் மத்தியில் நடத்தியுள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், மணக்கோலத்தில் இருக்கும் பெண் ஒருவர் சாலையின் மத்தியில் நிற்கிறார். அவரை ஒரு போட்டோகிராபர் வளைத்து, வளைத்து படம் எடுக்கிறார்.

இது ஓர் 2-வழி சுரங்க சாலை ஆகும். இந்த சுரங்க சாலைக்கு இரு பக்கங்களிலும் எழுப்பப்பட்டுள்ள சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதுதான், இந்த மணக்மக்கள் இங்கு போட்டோஷீட் நடத்தியிருப்பதற்கு காரணம் என்று நினைக்கிறோம். இந்த சுரங்க சாலையில் இவர்கள் போட்டோஷீட் நடத்தி கொண்டிருந்த சமயத்தில், இவர்களுக்கு இரு பக்கங்களிலும் வாகனங்கள் வேகமாக செல்வதை வீடியோவில் காணலாம்.
இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில், அளவில் பெரியதான பேருந்து ஒன்று கூட இவர்களுக்கு அருகே செல்வதை காண முடிகிறது. வாகனங்களில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டு சென்றப்போதிலும், அந்த பெண் எந்தவொரு சளனமும் இன்றி போட்டோவுக்கு மாறி மாறி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோகிராபரும் எந்தவொரு பயமும் இன்றி அடுத்தடுத்து போட்டோக்களை எடுத்து தள்ளினார்.

இதில் இவர்கள் செய்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், வாகனங்கள் செல்லும் பாதையில் நிற்காமல் உஷாராக சாலையின் நடுவே போடப்பட்ட வெள்ளை நிற கோடுகளின் மீது நின்றுக் கொண்டு இந்த போட்டோஷீட்டிங்கை நடத்தியுள்ளனர். இருப்பினும், இவ்வாறான செயல்கள் முற்றிலும் தவறானது மற்றும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், சில வாகன ஓட்டிகள் ஓவர்டேக் செய்ய வெள்ளை கோட்டை தாண்டுவதை பார்த்திருக்கிறோம்.
ஆதலால், இவ்வாறான சம்பவங்கள் திருமணத்திற்கு முன்பே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்க கூடும். இதுவாவது பரவாயில்லை இந்தியாவில் ஒருசில ப்ரீ-வெட்டிங் போட்டோஷீட்கள் ஹைவேயில் அதிவேகமாக காரில் சென்றுக் கொண்டவாறே கூட நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, நம் நாட்டில் ப்ரீ-வெட்டிங் போட்டோஷீட்டிற்கு எதற்காக இந்த அளவிற்கு பிரத்யேகமான கவனம் கொடுக்கிறார்கள்? என்பது சுத்தமாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலைகள் பரபரப்பான இடமாகும். ஆதலால், மற்ற இடங்களை காட்டிலும் சாலையில் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், இவ்வாறான சம்பவங்களை அடிக்கடி நம் நாட்டில் பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், சாலை விதிமுறைகள் கடுமையானதாக இல்லாததே ஆகும்.


Click it and Unblock the Notifications









